உன் இனிமையான வாசத்தை
நுகரும்போதே
உன் குரலின் சத்தமும்
என் செவிகளைத் தொடுகிறது!!
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உன் இனிமையான வாசத்தை
நுகரும்போதே
உன் குரலின் சத்தமும்
என் செவிகளைத் தொடுகிறது!!
இனியபாரதி.
அவளைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன்....
அவளைப் பற்றி மட்டுமே நினைப்பேன்...
இன்றும் என்றும்!!!
இனியபாரதி.
அவள் இல்லாமல் நான் இல்லை என்பது எனக்கும் தெரியும்
அவளுக்கும் தெரியும்!!!
இருந்தும் என்னுடன் சண்டையிட்டு விலகிச் செல்ல நினைக்கும்
அவள் மனம் மட்டும் எப்படி இருக்கிறது என்று
என்னால் யோசிக்க முடியவில்லை!!!
இனியபாரதி.
கொஞ்சம் கொஞ்சமாய்
அவளை மறக்க
நினைத்து நினைத்து
இன்னும் மறந்து கொண்டிருக்கிறேன்
என்னை!!!
இனியபாரதி.
கனவுக் கதைகள் பல பேசி
உன் அன்பை நான் சுவைத்து
என் பாசம் நீ உணர்ந்து
உனக்காக நான்...
எனக்காக நீ...
என்று வாழத் தொடங்கும் நாள் தான்
என் வாழ்வின் கனவு நாள்!!!
இனியபாரதி.
அனைத்தையும் அடக்கி ஆளும்
அந்த அன்பு மனம்
அவனுக்கு மட்டும் கட்டுப்பட்டு
என்றும் அவன் மதிமுகத்தை மட்டும்
எண்ணிக் கொண்டிருக்கிறது...
இனியபாரதி.
சிறு வயதில் பொம்மைகள் பின்னால் ஓடினேன்...
பள்ளிப் பருவத்தில் ஆசிரியர்கள் பின்னால் ஓடினேன்...
கல்லூரிப் பருவத்தில் பேராசிரியர்கள் பின்னால் ஓடினேன்...
இளமைப் பருவத்தில் உன் பின்னால் ஓடினேன்...
என் முதுமைப் பருவத்தில் ஓய்வின் பின்னால் ஓடுவேன்...
இனியபாரதி.
என் விழிகள் ஏங்கித் தவிக்கும்
சூரியனின் வருகைக்காய்!!!
என் மனம் காத்துக் கிடக்கும்
பூக்களின் வாசத்திற்காய்!!!
அப்பொழுது
நான் ஏங்கித் தவிப்பேன்....
அவளை நினைத்து!!!
இனியபாரதி.
அவளின் முகத்தழகில் மயங்கிவிட்ட
அவன் நிலை தான் அறியாமல்
அவனும் தவிக்கிறான் ..
அவன் முகத்தின் முன் பட்டுவிட்ட
வெட்கத்தில்
அவளும் தவிக்கிறாள்...
இனியபாரதி.
அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டாலும்
உன்னுடன் சமரசம் செய்யாமல்
எனக்கு உறக்கம் இல்லை...
அதுவும் என்னைக் கொஞ்சிக் கொஞ்சி
ஆசையாய் சமரசம் செய்யும் அழகை
இரசிப்பதற்காகவே
மறுபடியும் சண்டையிடத் தோன்றுகிறது....
இனியபாரதி.
அவளுக்கு அது பிடிக்கும் என்பதற்காகத் தான்
அது எனக்கும் பிடிக்கும்...
இருந்தும்...
அதை எனக்குப் பிடிக்காதது போல்
காட்டிக் கொள்வதில்
என் ஆசை நிறைவேறுகிறது...
உன் முகம் கோபத்தில் சிவக்கிறது...
என் முகம் அதை உரசிப் பார்க்கிறது...
இனியபாரதி.
அவளின் ஆசைகளையும்
ஏக்கங்களையும்
அறிந்து கொண்டு
அவளை என் கண்ணுக்குள் வைத்து
பார்த்துக் கொள்ளத் தான்
என் ஆசைகளை ஒதுக்கி விட்டு
அவளைப் பின்தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்...
இனியபாரதி.
கருவிழிக்குள் அவளை வைத்துக் காப்பேன் என்றேன்...
அவள் கருவிழி நீரையும் வெளியில் வரவிடாது காப்பதில் தான்
என் பெருமை இருக்கிறது...
இனியபாரதி.
என் எண்ணங்களை எல்லாம்
நேரடியாக வெளிப்படுத்த
எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும்
என் எழுத்துகள் அனைத்தும்
என் அன்பை உனக்கு எடுத்துச் சொல்லும்....
இனியபாரதி.
அடிக்கடி அங்கும் இங்கும்
சாயும் உன் மனம்
எப்போது நிலையாய்
ஓரிடத்தில் நிற்கப் போகிறதென்று
தெரியவில்லை...
இனியபாரதி.
அழகிய மாநிலம் கேரளா...
பூவுலகின் சொர்க்கம் என்பார்கள்....
அளவுக்கு அதிகமான தண்ணீர் வரவால்
அதன் இன்றைய நிலைமை???
அதே போலத் தான்...
உன் அன்பும் கோபமும்...
இரண்டும் அதிகமாகும் நேரங்களில்
உன்னை நீயே மறந்துவிடுகிறாய்!!!!
இனியபாரதி.
அவளுக்காய் என் நேரம் அனைத்தையும்
ஒதுக்க எனக்கு விருப்பம் இருந்தும்
அவளிடம் பேச விரும்பாதது போல்
ஏன் நடிக்கிறேன் என்று என் மனம்
அடிக்கடி கேட்டுக் கொள்கிறது...
அவளிடம் என் அன்பை
கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்ட ஆசை...
இனிய பாரதி.
நம் பாரதத்தின் கொடியை மட்டும்
ஏற்றி விடுவதால்
நமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதென்று
கொள்வதில் அர்த்தமில்லை...
என்று
நம் நாட்டின் ஒவ்வொரு பிரஜ்ஜையும்
தன் விருப்பத்தின் படி
தனக்குப் பிடித்த வேலையைச் செய்து
தனக்குக் கிடைத்த வருமானத்தில்
தன் வாழ்வை நிம்மதியாக
கழிக்கிறானோ...
அன்று தான்
உண்மையான சுதந்திர தினம்!!!!
இனியபாரதி.
அவளைக் கண்ட அந்த நாளில் இருந்து
கவிதையாய் கிறுக்கித் தள்ளிக் கொண்டு இருக்கிறேன்....
அவளுடனான என் நிமிடங்களை....
இனியபாரதி.
உன்னுடன் இருக்கும் அந்த நிமிடங்கள்
என் அருகில் நடப்பதெதுவும்
எனக்குப் புரிவதில்லை...
நான் சாலையில் செல்கிறேனா!!
இல்லை
ஆகாயத்தில் பறக்கிறேனா!!
என்பதை உணர்வதற்குள்
நீ என்னை விட்டுச் சென்று விடுகிறாய்....
இனிய பாரதி.
கொஞ்சம் அவசரம் தான்
அனைத்துப் பிரச்சனைகளுக்கும்
காரணமாய் அமைந்துவிடுகிறது...
அந்த அவசரமே
நம் அன்புக்குரியவர்
நம்மை அதிகம் புரிந்து கொள்ள
வழிவகையும் செய்கிறது....
இனிய பாரதி.
அவள் வேறொருத்தி என்றால்
அவள் இருக்கும் பக்கம்கூட
திரும்பிப் பார்த்திருக்க மாட்டேன்...
நீ என்பதால்
இன்னும் காத்திருக்கிறேன்
உன் விழிப் பார்வைக்காய்...
இனியபாரதி.
எல்லாவற்றிற்கும் காரணமாய்
எப்போதும் அவள் மட்டுமே
இருப்பாள் என்று நினைக்காதே...
அவன் கொடுத்த ஏமாற்றங்கள் கூட
காரணமாய் இருக்கலாம்...
இனியபாரதி.
கடுமையான
கஷ்டங்களைக் கடந்து
காயப்பட்டு
கடந்து வந்த காதல்
கட்டாயம்
காலம் கடந்து நிலைக்கும்....
இனியபாரதி.
எல்லா கஷ்டங்களையும்
அவள் ஒருத்திக்காய்
என்றும் ஏற்றுக் கொள்ள
நான் காத்திருக்கிறேன்...
அவள் கண்டிப்பாய் என்னிடம்
திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையுடன்...
இனியபாரதி.
நான் உண்மையாக
அவள் மீது வைத்த காதல்
அவளின் எண்ண அலைகளில்
ஏதாவது மாற்றம் தருமா?
இனியபாரதி.
காரணம் இன்றி
உன்னை முழுமையாய்
அன்பு செய்த பிறகு
இப்படி வழியில்
விட்டுச் செல்வது முறையா?
இனியபாரதி.
கண்டிப்பாக எல்லோருக்கும்
நான் நல்ல தோழியாய்
இருக்கிறேன் என்பதில் ஐயமில்லை...
எனக்குத் துரோகம் செய்தாலும்
அவரை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்
பக்குவம் எனக்குண்டு...
அவர் தனது தவற்றை ஒப்புக் கொள்ளும் போது...
என் அன்பு எப்போதும் போல் மாறாமல் தான் இருக்கும்!!!
இனியபாரதி.
நம்மால் பிறருக்கு பயனில்லை என்று
நாமாக நினைத்துக் கொண்டு
அவர்களுக்கு எதுவும் செய்யாமல்
இந்த உலகை விட்டுச் செல்வது
வாழ்க்கை அல்ல...
நம்மால் முடிந்தவரை
நம் நேரங்களை மற்றவர்களுக்காக ஒதுக்குவோம்...
இதுவே நாம் செய்யும் மிகப் பெரிய செயல்
இவ்வுலகில்...
இனியபாரதி.
செல்லம்மா...
நீ இந்த உலகை விட்டுப் பிரிந்த இந்நாளில்
என்னையும் கடுமையாய்
காயமடையச் செய்து விட்டாய்!!!
இருந்தும்
உன் இழப்பு
பல நல்ல எண்ணங்களை
என் வாழ்வில் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன்...
உன் ஆன்மா சாந்தி பெற!!!
இனியபாரதி.
இறைவா...
என்னை உமது கருவியாய் மாற்றியருளும்...
உமது சித்தப்படி நான் நடக்க
எனக்கு அருள்புரியும்...
உம்மை மறந்து வாழ்ந்த நேரங்களை எண்ணி வருந்துகிறேன்...
இனி என் வாழ்வில்
உமக்கு மட்டும் முதலிடம் தர அருள்வாய்!!!
இனியபாரதி.
நம் கண்கள் கொள்ள முடியாத அளவுக்கு
காட்சிகள் காண்போம்
என்பதால் தான் என்னவோ
தூங்கும் போது கண்மூடித் தூங்குகிறோம்...
இனியபாரதி.