இந்த வருடம் முழுவதும் என்னுடன் இருந்து, என்னை வழிநடத்திய இறைவனுக்கு நன்றி!!!
இந்த வருடத்தில் நான் எடுத்த இரண்டு தீர்மானங்கள்...
1) ஒருநாள் கூடத் தவறாமல் வலைப்பதிவு இடுவது...
2) நான்கு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்வது...
இவை இரண்டும் என் வாழ்வில் நிகழ, எனக்கு அருள் புரிந்த இறைவனுக்குப் புகழ்!!!
2019 - ஆம் ஆண்டும் என் வலைப்பூவை அலங்கரிப்பதைத் தொடர வேண்டும்....
இந்த வருடம் புதிதாக ஒரு முயற்சி....
தினமும் பதினைந்து நிமிடங்கள் ஆழ்நிலைத் தியானம் செய்ய வேண்டும்...
கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம்... பார்க்கலாம்....
கடந்த இரண்டு வருடங்களாக என் வலைப்பூவை அலங்கரிக்க எனக்கு உதவியாக இருந்த என் நண்பர்கள், வாசகர்கள், உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் பல...
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களுடன்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக