திங்கள், 31 டிசம்பர், 2018

எதையோ தேடி...

எதையோ தேடித் தான் இந்த வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கின்றது...

அந்தத் தேடல் முடிவது நம் இறப்பில் தான்...

அப்படி இடையில் கிடைக்கும் செல்வங்கள்

நம்முடன் இருப்பது போல் இருந்தாலும்...

நமக்கு மகிழ்ச்சி அளிப்பது இல்லை!!!

ஏன் இந்த வாழ்க்கை என்று யோசிக்க ஆரம்பிக்கும் நேரம்...

நம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகும் ...

இப்படியே துன்பங்களை அனுபவிப்பது தான் தேடலோ? வாழ்க்கையோ??

இனியபாரதி.

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

புதுவருடத் தீர்மானங்கள் ...

இந்த வருடம் முழுவதும் என்னுடன் இருந்து, என்னை வழிநடத்திய இறைவனுக்கு நன்றி!!!

இந்த வருடத்தில் நான் எடுத்த இரண்டு தீர்மானங்கள்...

1) ஒருநாள் கூடத் தவறாமல்  வலைப்பதிவு இடுவது...

2) நான்கு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்வது...

இவை இரண்டும் என் வாழ்வில் நிகழ, எனக்கு அருள் புரிந்த இறைவனுக்குப் புகழ்!!!

2019 - ஆம் ஆண்டும் என் வலைப்பூவை அலங்கரிப்பதைத் தொடர வேண்டும்....

இந்த வருடம் புதிதாக ஒரு  முயற்சி....

தினமும் பதினைந்து நிமிடங்கள் ஆழ்நிலைத் தியானம் செய்ய வேண்டும்...

கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம்... பார்க்கலாம்....

கடந்த இரண்டு வருடங்களாக என் வலைப்பூவை அலங்கரிக்க எனக்கு உதவியாக இருந்த என் நண்பர்கள், வாசகர்கள், உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் பல...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களுடன்...

இனியபாரதி.

சனி, 29 டிசம்பர், 2018

அணியும் பேசும்...

அவளின் கொலுசு சத்தம் கேட்கும் போதெல்லாம்

என் தாயின் ஞாபகம் வருகின்றது...

என்று தந்தை தன் பிஞ்சின் கொலுசு சத்தம் கேட்டு சொல்லும் போது...

பெண்ணானவளும்

அவளின் ஒவ்வொரு அணியும்....

அவளைப் பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கின்றன...

இனிய பாரதி.

வெள்ளி, 28 டிசம்பர், 2018

பேசிப் போன வார்த்தை எல்லாம்...

அவளிடம் இருந்து
நான் திருடி வந்தது

பொன்னையோ

பொருளையோ அல்ல...

அவள் பேசிப் போன வார்த்தை எல்லாம் கோர்த்து
பரிசாய்க் கிடைத்த
நான் இயற்றிய அந்தக் காவியத்தை!!!

இனியபாரதி.

வியாழன், 27 டிசம்பர், 2018

இன்னிசையாக...

அவளின் நினைவுகள் என் மனதில் நீங்காமல் இருக்கக் காரணம்...

அவள் எனக்காக விட்டுச் சென்ற இன்னிசை மட்டும் தான்...

அது தான் என்னைத் தினமும் தாலாட்டுகிறது... அவள் சார்பாக!!!

இனியபாரதி.

புதன், 26 டிசம்பர், 2018

காயம் ஆற...

சிலர் கொடுத்த காயங்கள் ஆற சில நாட்கள் ஆகலாம்...

அந்த சில நாட்களில் புது உறவுகள் கிடைக்கலாம்...

அந்தக் காயம் ஆறி, இந்த உறவின் பிரிவின் காயம் ஆறாமல் இருக்கும்...

அந்த நாட்களில் இன்னொரு புது உறவு வரும்...

இப்படி தொடர்ந்து கொண்டு இருப்பது தான் வாழ்க்கையும் விதியும்...

புரியவில்லை தானே??? அது தான் எனக்கு வேண்டும்...

நாளை பார்க்கலாம்!!!

இனியபாரதி.

செவ்வாய், 25 டிசம்பர், 2018

பிறப்பின் மகிழ்ச்சி...

மழலையாய் மண்ணில் வந்த நாள் நாம் எல்லோரும் சிறப்பாய்க் கொண்டாடும் ஒரு நாள்...

சில நேரங்களில் அந்நாள் கூட கசப்பான அனுபவங்களைத் தரும்...

நாம் எந்த நோக்கத்திற்காய் இம்மண்ணில் வந்தோம் என்பது சில நேரங்களில் புரியாத புதிராகவே இருக்கிறது....

யாருக்கும் பயன்படாமல்...

எந்த வேலையும் செய்யாமல்...

ஏன் இருக்கிறேன் என்ற எண்ணம் கூட எழலாம்...

அப்படி ஒரு எண்ணம் இருந்தால் இப்போதே அதைத் தூக்கி எறிந்து விடுங்கள்!!!

நம் பிறப்பு நமக்கு மட்டும் அல்ல...

நம்மைச் சுற்றியுள்ள யாவருக்கும் ஆசீர்வாதமாய் அமையட்டும்...

இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களுடன்...

இனியபாரதி.

திங்கள், 24 டிசம்பர், 2018

கடமையை உணர்ந்து...

அன்பு செய்வதும்...

ஆதரவாய் இருப்பதும்...

இன்பத்தைப் பகிர்வதும்...

ஈகை புரிதலும்...

உறவுகளுடன் ஒன்றித்திருப்பதும்...

ஊரார்க்கு உதவுதலும்...

எளிமையைக் கடைபிடித்தலும்...

ஏற்ற சொல் பேசுதலும்...

ஐம்புலன்களை அடக்குதலும்...

ஒன்றுபட்டு வாழ்தலும்...

ஓசை இன்றி நடத்தலும்...

ஒளவை‌ வழி வாழ்தலும்...

நம் கடமை ஆகும்!!!

இனிய பாரதி.

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

தேடி வந்த உறவு...

அநேக நேரங்களில் நம்மை மதித்து அன்பு செய்யும் உள்ளங்களை உதாசீனப்படுத்தி விடுவதுண்டு...

சில நேரங்களில் அவை எதிர்பாராமல் நடப்பதாக இருக்கலாம்...

மனதில் மகிழ்ச்சி இல்லாமல் ஒரு கனத்துடன் எப்போதும் இருப்பது போல் உணர்வோம்...

அப்படி நம்மைத் தேடி வந்து அன்பு செய்யும் உறவுகளை விடாமல் இறுகப் பற்றிக் கொள்வது நம் பொறுப்பு!!!

இனியபாரதி.

சனி, 22 டிசம்பர், 2018

இரசித்திருப்பேன்...

உன் அழகை ரசித்துக் கொண்டே இருந்திருப்பேன்...
உன் வீட்டு முகம் பார்க்கும் கண்ணாடியாய்...

உன் கூந்தலை அலங்கரிந்திருப்பேன்...
உன் நந்தவன மலராய்...

உன் நாவிற்கு சுவை அளித்திருப்பேன்..
உன் வீட்டுச் சர்க்கரையாய்...

இனியபாரதி.

வெள்ளி, 21 டிசம்பர், 2018

மேலோட்டமாக...

தனித்திருப்பதும்

தனிமையில் இருப்பதும்

தனித்து விடப்பட்டு இருப்பதும்

மேலோட்டமாகப் பார்க்க ஒன்றும் புரியாத விசயங்கள்....

உணர்ந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்!!!

இனியபாரதி.

வியாழன், 20 டிசம்பர், 2018

இதழ் தரும் இதம்...

அவள் இதழ் தரும் இதம் மட்டும்
எனக்கு எப்போதும் வேண்டும்...

அவளின் இதழ் மட்டுமே என் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது....

அவள் இதழ் மட்டுமே என் உள்ளத்தின் சோர்வுகளை வார்த்தைகளால் நீக்குகிறது...

அவள் இதழ் மட்டுமே என் மனத்திற்கு புத்துயிர் ஊட்டுகிறது...

அவள் இதழ் மட்டுமே எனக்கு உயிர் கொடுக்கின்றது...

இனியபாரதி.

புதன், 19 டிசம்பர், 2018

அவளை நம்பி...

அவளை மட்டுமே நம்பி நகர்ந்து கொண்டிருக்கும் என் வாழ்க்கை

அவளில்லாமல் என்ன ஆகுமோ என்ற பயம் மட்டும் அடிக்கடி வந்து போகின்றது!!!!

இனியபாரதி.

செவ்வாய், 18 டிசம்பர், 2018

தெரிந்து கொள்ளப்பட்ட..

அவளின் வார்த்தைகளும்
வாக்குகளும்
தெரிந்து கொள்ளப்பட்டவை தான்...
ஆனால்
அதை உபயோகிக்க வேண்டிய
நேரமும் இடமும்
அவளுக்குத் தெரியவில்லை!!!

இனியபாரதி.

திங்கள், 17 டிசம்பர், 2018

தேவதைக்கும் தேவை வரும்...

அவள் தேவை அறிந்து முன்னமே செய்து விடுவது
என் மனதில் ஒரு ஆனந்தத்தைக் கொண்டு வருகிறது!!!

அவள் கேட்கக் கூடியவை
சிறிய பொருட்கள் தான்...

அதை அவள் பெறும் போது
கிடைக்கும் ஆனந்தம்
அளவிட முடியாதது...

என் அழகு குட்டி தேவதையின்
ஒவ்வொரு தேவையையும்
தேவைப்படும் போது
பூர்த்தி செய்வதே இந்தத் தாயின் கடமை!!!

இனியபாரதி.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

ஆயிரம் யோசனை...

ஆயிரம் யோசித்தும்
விடை காண முடியவில்லை...

கேள்வியே குழப்புவதால்!!!

காலம் தான் விடை சொல்லும் அவளின் எல்லா கேள்விகளுக்கும்!

இனியபாரதி.

சனி, 15 டிசம்பர், 2018

இரசித்த நேரம்...

அந்தப் பிஞ்சு விரலைத் தடவிப்பார்த்த நேரம்...

நடுக்காட்டில் தனிமையில் பனியை உணர்ந்த நேரம்...

என் நெடும்பயணத்தில் இன்னிசை கேட்ட நேரம்...

வேலைப் பளுவில் தோழி தோள் கொடுத்த நேரம்...

அந்திமாலையில் அமைதி உலா வந்த நேரம்...

இனியபாரதி.

வெள்ளி, 14 டிசம்பர், 2018

கொடுக்க கொடுக்க...

நான் அன்பைப் பொழிய பொழிய
கிடைத்தது நல்ல நட்புகள்...

நான் கொடுக்க கொடுக்க
கிடைத்தது என் தேவைகள்...

நான் ஓட ஓட
துரத்தியது என் ஆசைகள்...

நான் மாற மாற
மாறியது என் உறவுகள்...

இனியபாரதி.

வியாழன், 13 டிசம்பர், 2018

ஏதேனும் உண்டோ?

அவள் கூறுவதைக் கேட்காமல்
நான் சென்ற பாதை என்று ஏதேனும் உண்டோ???

அவள் முகத்தைப் பார்க்காமல்
நான் எழுந்த நேரம் என்று ஏதேனும் உண்டோ???

அப்படி ஏதாவது உண்டென்றால்
அது என் மரணிப்பு தான்!!!

இனியபாரதி.

புதன், 12 டிசம்பர், 2018

குறைகூறும்...

குறைகளைக் கூறி விடுவதும் சுலபம்...
குறைகளைக் குறைகள் என்று உணர்வது கடினம்...

மற்றவரை குறை சொல்வது சுலபம்...
அந்தக் குறை நமக்கு இருந்தால்
அதைத் திருத்திக் கொள்வது கடினம்...

சுலபமும் கடினமும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை!!!

இனியபாரதி.

செவ்வாய், 11 டிசம்பர், 2018

வழி தவறிச் செல்லா...

தீதொன்றும் யானறியேன் பரமனே...
நான் செய்த தவறெல்லாம்
வழிதவறிச் செல்லாமல் இருந்தது தான்...

அதற்காக நான் அனுபவிக்கும் தண்டனை
உயிரின் இழப்பை விடக் கொடியது!!!

இனியபாரதி.

திங்கள், 10 டிசம்பர், 2018

மன்னிப்புக் கோரி...

கேட்கப்படும் மன்னிப்பின் மதிப்பு
ஆட்களைப் பொறுத்தது அல்ல...

தவற்றை உணர்ந்து திருந்திய
மனதைப் பொறுத்தது...

இனியபாரதி.

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

அப்படி இப்படி ...

கேட்டுத் தெரிந்து கொள்ள பல விசயங்கள் உள்ளன...

ஆனால் அவள் தெரிந்து கொள்ள நினைப்பது
யாருக்கும் தெரியக் கூடாது என்று நான் நினைக்கும் விசயங்களை!!!

சொல்ல நினைக்கவில்லை...
சொல்லாமல் இருக்கவும் வாய்ப்பில்லை...

அப்படி இப்படி பொய் கூறினாலும்
சரியாகக் கண்டுபிடித்து விடுகிறாள்...

அவள் மிகவும் புத்திசாலி...

இனியபாரதி.

சனி, 8 டிசம்பர், 2018

இராகங்கள் பதினாறு...

பதினாறு இராகங்களும் இணைந்து
ஒலிக்கும் ஓசை தான்
அவளின் குரல் என்று இன்று தான் உணர்ந்தேன்....

இனியபாரதி.

வெள்ளி, 7 டிசம்பர், 2018

சண்டைக்கோழி...

அடம்பிடிக்காமல் அவள் செய்யும்
ஒவ்வொரு செயலும்
அவளைச் சண்டை போடத் தூண்டும் போல ....

சரியான சண்டைக்கோழி!!!

இனியபாரதி.

வியாழன், 6 டிசம்பர், 2018

நண்பர்கள்....

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால்
நண்பர்கள் நம்மை அதிகம் அன்பு செய்பவர்கள்...

மற்ற எல்லாரையும் விட...
ஆனால் அதை வெளிப்படுத்துவதில் சில நேரம் தாமதம் ஏற்படலாம்...

இனியபாரதி.

புதன், 5 டிசம்பர், 2018

நூலிடை...

என் ஆடையின் நூலிடை கூட உணரும் உன் வாசத்தை...

நீ மனம் கமலும் மல்லிகை என்பதால்!!!

இனியபாரதி.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

அன்பு உள்ளம்...

கரைந்து கொண்டிருப்பது நான் தான்...
உனக்கு ஒளி கொடுப்பதால்
என்னை நான் வருத்திக் கொள்வதில் வருத்தமில்லை....

மெழுகுவர்த்தி...

வாடி விடுவது நான் தான்...
உனக்கு மணம் தருவதால் நான் வாடுவதில் வருத்தமில்லை...

மலர்...

அழிந்து கொண்டிருப்பது நான் தான்...
உனக்கு நிழல் தருவதில் வருத்தமில்லை...

மரம்...

மனிதனைத் தவிர
மற்ற அனைத்தும்
மற்றவர் மேல் அக்கறையுடன் தான் வாழ்கின்றன...

இனியபாரதி.

திங்கள், 3 டிசம்பர், 2018

வாடி விட...

சீக்கிரம் வாடி விடத் துடிப்பது
நான் அல்ல...

என் அழகை ரசிக்கும் இறைவனுக்கு
நான் தேவைப்பட்டதால்
என்னை ஒரு நாளில் அவனுடன் எடுத்துக் கொண்டான்....

ரோஜா

இனியபாரதி.

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

தெரியாமல்...

கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில்
அவள் விட்டுச் சென்ற நேரம் மட்டும்
என் விழிகளில் அடிக்கடித் தோன்றி மறைகிறது...

ஆனால்...

என்ன காரணம் என்று மட்டும் இன்று வரைத் தெரியாமல் தவிக்கிறேன்...

அவள் இழப்பை ஏற்க முடியாமல்....

இனியபாரதி.

சனி, 1 டிசம்பர், 2018

காண முடியா...

அவளின் அன்பை என்னால் காண முடியவில்லை...

ஆனால்...
ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்...

என்னிடம் துடிப்பதும் அவள் இதயம் என்பதால்...

இருந்து அன்பைக் கொடுத்தாள்...
இறந்து இதயத்தை அன்பாய்க் கொடுத்தாள்...

அவள் 'என் தாய்'

இனியபாரதி.