திங்கள், 9 ஜனவரி, 2017

ஆச்சரியங்கள்...

நமக்குப் பிடிக்கும் என்று யாரிடமும் சொல்லாதததை
எப்படியோ அறிந்து
அதைச் சரியாக நம் பிறந்த நாளன்று
நமக்குப் பரிசளிக்கும் தாய்!

எதுவும் சொல்லாமல் தூங்கச் சென்று
அதிகாலை எழுந்தவுடன் அங்கு நீ கேட்டதை வைத்திருக்கிறேன்
எடுத்துக்கொள் என்று கூறும் தந்தை!

நமக்குப் பிடித்த குட்டிக் குட்டிப் பொருட்களை
வாங்கிக் கொடுத்து நமக்கு
மகிழ்ச்சியூட்டும் தங்கை!

என்ன தான் வீட்டில் சண்டையிட்டாலும்
வெளியில் உன்னை விட்டுக் கொடுக்காத அண்ணன்!

நாம் விரும்பும் ஒருவர்
நாம் பேச நினைக்கும் சமயத்தில்
நமது அலைபேசியை தொடர்பு கொள்வது!

நம் அன்புக்குரியவர் நமக்கு வைத்த செல்லப்பெயரைச் சொல்லி
மற்றவர் நம்மை அழைக்கும் போதுள்ள வியப்பு!

மழை வரும் என்று நினைத்து நடக்கும் போது
உடனடியாக மழை பெய்வது!

இவரைப் பார்க்க வேண்டுமென்று எண்ணும் நேரத்தில்
அவரைச் சந்திக்கும் தருணம்!

நாம் படிக்க வேண்டுமென்று நினைக்கும் புத்தகத்தை
நம் நண்பர் படித்து முடித்திருப்பது!

நாம் காதலிக்கும் பெண்
நம்மை இன்னும் அவள் தோழனாகவே நினைப்பது!

நாம் காதலைச் சொல்லிவிட்ட பின்பும்
அதை ஏற்க மறுக்கும் அழகிகள்!

சிறு வயதில் நம்முடன் படித்த தோழிகளைப்
பதினைந்து வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது
கண்களில் மிளிரும் ஒளி!

முதலாம் வகுப்பு பயின்ற ஆசிரியரை
நீ ஆசிரியரான பின்பு சந்திப்பது!

மற்றவர் குழந்தையை உன் குழந்தையைப் போலப் பாவிப்பது!

இப்படி
நாம் வாழும் ஒவ்வொரு தருணங்களும் ஆச்சரியமே!

அனுபவித்து வாழ்வோம்!

இறைவன் அருள் நம்மோடு!

இனியா.

கருத்துகள் இல்லை: