தனியார் பேருந்தின் மீது கொண்ட காதல் தோல்வியால் அரசுப் பேருந்தின் நிலைமை....
தனியே தன்னந்தனியே
உன்னைப் பார்த்து பார்த்து நின்றேன்!
உனக்காக யாவரும் காத்திருக்கின்றனர்!
நான் நின்றால் கூட
என்னைப் பார்ப்பதற்கு ஆளில்லை!
தங்களுடைய தேவைக்கு மட்டும்
என்னைப் பயன்படுத்துகின்றனர்!
உன் வழியில் நானும்
உன்னைத் தொட்டுவிட ஆசைப்படுகிறேன்!
ஒருநாளும் நடப்பதில்லை!
அதிக தூரம் செல்லும் நானும்
அதிக வேகம் செல்லும் நீயும்
ஒன்றாய்ச் சேர்ந்தால்!!!
என்று அனுதினமும் யோசிக்கிறேன்!
நான் யோசிக்கும் வேகத்தில் நீ
சிட்டெனப் பறந்துவிடுகிறாய்!
உன்னைக் கவனித்துக் கொள்ள நீயே
ஆட்களை நியமித்துக் கொள்கிறாயோ!
என்னைக் கண்டு கொள்ள
எனக்கே பிடிக்கவில்லை!
உன் மீதுள்ள அன்பால் உன்னை
உரசிச் செல்லும் சில நாட்கள்
கண்ணாடியுடன் சேர்த்து
என் இதயமும் தான் நொறுங்குகின்றது!
உன்னுடன் சேர்ந்து செல்பி
எடுத்துக் கொள்ள ஆசை!
உன் அம்மா...அப்பா....
என் அருகிலேயே உன்னை விடுவதில்லை!
கடைசியாக என் காதல்
படுதோல்வி அடைந்ததை நினைத்து
நானே
என்னை காயப்படுத்திக் கொள்ளப் போகிறேன்!
என்னை அலங்கோலமாக்கப் போகிறேன்!
என் கண்ணாடிகளை உடைத்துக் கொள்ளப்போகிறேன்!
என் மேற்தட்டில் ஓட்டைகள் இட்டுக் கொள்ளப்போகிறேன்!
நீ...
உன்....
இனிய காதலர்களுடன்...
அனுதினமும்... உலா வருவதைப் பார்க்க....
இனி நான் இருக்க மாட்டேன்!
விடைபெறுகிறேன்!
(இதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றும் என் சொந்தக் கற்பனையே! யாரையும் குறிப்பிடுவன அல்ல)
அன்புடன்
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக