அன்பு இறைவா....
உம்மாலே ஆகாத காரியம் ஒன்றும் இல்லை...
மகிழ்ச்சியான நேரங்களில் உம்மை மறந்து
மாய இன்பங்களில் மூழ்கியிருந்த நேரங்களை நினைத்து
இந்த இரவு நேரத் தனிமையில் சிந்திக்கிறேன்!
எனக்கு மகிழ்ச்சியைத் தா.. ஆனால்
அதைவிட துன்பங்களை அதிகமாகத் தா...
உம்மிடம் நெருங்கி வர நீர் கொடுக்கும் துன்பங்கள்
எனக்கு உதவும்!
உம்மை மறந்து இருந்த நேரங்களை நினைக்கிறேன்!
இனி அப்படி இருக்கக் கூடாதென்று பிராத்திக்கிறேன்!
என்றும்...
உம் அன்பு எத்தனை பெரியது என்பதை உணர்ந்து
உமக்கேற்ற பிள்ளையாய் என்னை மாற்றியருளும்.
எப்படி நான் மறந்தேன் உம் அன்பை!
அன்பே... அன்பாக.. அன்புடன்...
என்றும் உம் அன்பில் நான் வாழ....
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக