அனுதினமும், அன்பின் பாதையில், எனது கிறுக்கல்களை வாசித்துக் கொண்டிருக்கும், என் அன்பு நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பின் வாழ்த்துகள்!!!
எனக்கு ஏதாவது மேற்கோள் வாசகம் படிக்கும் போது பிடித்திருந்திருந்தால், அதைக் குறிப்பெடுத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு. அதை வீட்டிற்கு வந்ததும் ஒரு சார்ட்டில் எழுதி, என் அறையில் ஒட்டி வைத்துவிடுவேன். என் அறை முழுவதும் பல மேற்கோள்களால் தான் நிறைந்திருக்கும்.
இரவு தூங்கச் செல்லும் முன், இந்த மேற்கோள்களும், ஒரு சில என் நினைவுகளும்(நிஜங்களும்) தான் நான் கடைசியாகப் பார்ப்பது.
என் பழக்கம் இது. இந்த மேற்கோள்கள் நான் மகிழ்ச்சியாய் இருக்கும் தருணங்களில் எனக்கு விழிப்புணர்வையும், நான் துக்கப்படும் சமயங்களில் எனக்குத் தூண்டுதலாகவும் இருக்கின்றன. எதையாவது யோசிக்கும் போது, என் கண்களில் படும் இந்த மேற்கோள்கள் எனக்கு வலுவூட்டும்.
என் அறை, என்னைத் தவிர எவருக்கும் பிடிக்காத அளவிற்கு, மேற்கோள்கள் மட்டும் என் அறையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
நண்பர்களைப் போல் எப்போதும் என்னுடன் இருப்பவை.... என்னையே எனக்குக் காட்டுபவையாக உணர்கிறேன்!!!
என் இரசனையும், அவன் இரசனையும் ஒத்துப்போகாத என் நண்பன் ஒருவன், நான் இவ்வாறு மேற்கோள்கள் உபயோகிப்பதை முற்றிலும் வெறுப்பவன்..
அவன் இதைப் பற்றிப் பேசியது தான், இதை நான் எழுத வேண்டுமென்று என்னைத் தூண்டியது.
ஒருசில நேரங்களில், இந்த வார்த்தைகள் கூட நம் வாழ்வாக இருக்கலாம்...
என் அறையில் அதிக நாட்களாக என்னை ஒட்டிக்கொண்டே இருக்கும் ஒரு மேற்கோள்:
"இன்பத்தைத் தேடுபவனும் நீ தான்!!!!
இன்பமும் நீ தான்!!!!"
அடிக்கடி எனக்கு நானே இதைச் சொல்லிக் கொள்வேன்!!!
எனது கிறுக்கல்களை வாசிக்கும், என் அன்புத் தோழிகளுக்கு மிக்க நன்றி!!!
அவர்கள் தான், நான் அனுதினமும் எழுத என்னைத் தூண்டுபவர்கள்!!!
நன்றி தோழிகளே!!!
இனிய
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக