
அவள் வந்ததும், அவளிடம் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து சென்ற இடங்களின் ஃபோட்டோக்களை என்னிடம் காட்டிக் கொண்டிருந்தாள். மிகவும் நன்றாய் இருந்தன. அவளுடனான என் நாட்கள் என்றும் நினைவினின்று நீங்காதவை...
சீக்கிரம் அவளைக் காண, அவளுடன் சேர்ந்து ஊர் சுற்ற, அவள் ஊருக்குச் செல்ல வேண்டும்.
மாலை பள்ளியிலிருந்து செல்லும் போது, என்னைக் கட்டித் தழுவி, 'சென்று வருகிறேன்' என்றாள். என்னிடம் இருந்த 'ஒரு அதிசய பறவை' என்னை விட்டுப் பறந்து செல்கிறது போன்ற ஒரு உணர்வு...
சற்று வருத்தமாகத் தான் உள்ளது.
எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் நம் வேலைகளைச் செய்ய ஆரம்பிப்போம்.
வாழ்க்கை என்னவோ, எப்போதும் இரயில் பாதை போலத் தான்.... நிறைய வழித்தடங்கள் இருக்கும்... நிறைய நண்பர்கள் இருப்பார்கள்... ஆனால், கடைசி வரை சேரவே முடியாது. இறுதி வரை ஒன்றாக இருக்கவே முடியாது.
ஆனால், இறைவன் அருளால், அவர்களை என்றாவது ஒருநாள் சந்திக்கும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தூங்கச் செல்கிறேன்.
இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக