வியாழன், 12 ஜனவரி, 2017

அர்ச் அஞ்சேம்மாள் (செயிண்ட் ஆக்னஸ்)

இளம்பெண்கள் இயக்கத்தை இன்னும் எந்தெந்த வகையில் முன்னேற்றலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, திடீரென இளம் பெண்களின் பாதுகாவலி யாராக இருக்குமெனத் தோன்றியது. கூகுளில் தேடினேன்.... செயிண்ட் ஆக்னஸ் என்று வந்தது... அதுவும் அவருடைய திருநாள் ஜனவரி 21 என்று இருந்தது.. நல்லது தான்...

அவரைப் பற்றி நம் சக தோழிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்து, அவருடைய வரலாற்றைப் படிக்கத் தேடினேன்.. அவ்வளவு விரிவாக இல்லை என்றாலும், ஓரளவிற்கு அவரைப் பற்றிய குறிப்புகளை எடுத்தேன்.. சேகரித்தேன்.. என் தோழிகளுடனும் பகிர்ந்து கொண்டேன்.. அவர்களுக்கும் அவருடைய திருநாளை நாமெல்லாம் சேர்ந்து சிறப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது....

செயிண்ட் ஆக்னஸ் அவர்களைப் பற்றி நான் அறிந்து கொண்டவைகள் இதோ –
செயிண்ட் ஆக்னஸ் ஒரு வசதியான, கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர். அவரது பெயருக்கு இலத்தீன் மொழியில் 'ஆட்டுக்குட்டி' என்று பொருளாம்.. அதாவது கடவுளின் ஆட்டுக்குட்டி...இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்....என்று கூட பொருள் கொள்ளலாம்.

அவர் வயதில் வளர வளர, அழகிலும் மிகச் சிறந்து காணப்பட்டார். பல இளைஞர்கள் இவரைத் திருமணம் செய்ய வரிசையில் காத்திருந்தனர். ஆனால், அவர் 'நான் இயேசுவனின் துணைவி.. அவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவள்' என்று கூறி, அவர்களைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். அதனால் ஆத்திரமடைந்த ஒருவன் அவரைச் சித்திரவதை செய்து கொலை செய்யப் போவதாக மிரட்டினான்... எதற்கும் அஞ்சாத ஆக்னஸ் கடைசி வரைத் தன் கொள்கையில் இருந்து விலகவேயில்லை... தன் மகனை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் ஆக்னஸை நெருப்புக்குள் தள்ளி அவரைக் கொல்ல முயன்றார், பெர்ஃபெக்ட் செம்பிரோனியஸ்... ஆனால், நெருப்பு அவரை ஒன்றும் செய்யவில்லை....

இறுதியாக... ஆக்னஸ் தனது 12 ஆவது வயதில், வேத சாட்சியாக, தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பிற்காலத்தில் அர்ச் ஆக்னஸ் ஒரு புனிதையாக அறிவிக்கப்பட்டார். அவரது கல்லறையில் ஒரு ஆலயம் கட்டப்பட்டது...

இவர் எவ்வாறு தன் கற்பை இறைவனுக்கென்று அர்ப்பணித்தாரோ... எந்தத் துன்பம் வந்தாலும்...

எங்கள் கொள்கைகளிலிருந்து விலகக் கூடாது என்பதை அவரது வாழ்க்கை வரலாறு எனக்கு உணர்த்தியது.

இவரைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள ஆசை...

தெரிந்தவர்கள் பகிரலாம்..

நன்றி.

இனியா!

கருத்துகள் இல்லை: