நான் ஏழாம், எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, மாதத்திற்கு ஒருமுறை, எங்கள் சர்ச்சில் 'சமபந்தி விருந்து' என்றொரு நிகழ்வு நடக்கும். சமபந்தி விருந்து என்றாலே சிறுவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மகிழ்ந்து கொண்டாடுவர். சமபந்தி என்றால் என்ன?
பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு பார்க்காமல், அனைவரும் ஒன்றுகூடி, ஒன்றாய் அமர்ந்து, உணவு அருந்துவது.... நாங்கள், எங்களுடன் மறைக்கல்வி படிக்கும் நண்பர்களுடன் உட்கார்ந்து உணவருந்துவோம். இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்ற வரையறை அங்கு இருக்காது... அனைவரும் பேசிச் சிரித்துக் கொண்டே எங்கள் உணவை உண்போம்...
இப்போதெல்லாம் எங்கள் சர்ச்சில் சமபந்தி நடப்பதில்லை... எங்கள் நண்பர்கள் கூட்டமும் பிரிந்துவிட்டது. வெகு நாட்களுக்குப் பின், எங்கள் வீட்டை விட்டு, வெளியில், தோழியின் வீட்டிற்கு அன்பியக்கூட்டத்திற்குச் சென்றிருந்தேன்... சிறிய வீடு.. அந்த வீட்டிற்குள் அழகாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன, விரிப்புகள்... நான்கைந்து நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. கூட்டம் முடிந்ததும் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. ஃபாதர், சிஸ்டர், பெரியவர், சிறியவர் பார்க்காமல் எல்லோரும் கீழே அமர்ந்து ஒன்றாக உணவு உண்டோம். வீட்டில் கூட அவ்வளவு சாப்பிட்டிருக்க மாட்டேன்.. அங்கு வயிறு நிறைய சாப்பிட்டேன்.. மனதும் நிறைந்தது....
இதைப் போல் நிறைய சமபந்திகளில் கலந்து கொள்ள வேண்டும்... 'சமபந்தி' நம் கோயில்களிலும், ஆலயங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.. அதன் அழகே தனி தான்..
இனிய இரவு வணக்கம்.
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக