பெரும்பாலும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் நன்றாய் படித்து நிறைய மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்... முதல் ரேங்க் வாங்க வேண்டும்... என்று தான் நினைப்பார்கள்... அவன் எப்படிப் படிக்கிறான்? படிப்பில் அவனுக்கு ஆர்வமிருக்கிறதா? அவனது குறிக்கோள்கள் என்ன? என்றெல்லாம் கேட்பதே இல்லை...
அதுவும் இந்தக் காலத்தில், பத்தாம் வகுப்புப் பாடங்களை ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஒரே புத்தகத்தைப் படித்து, படித்த அனைத்தையும் பொதுத்தேர்வில் வாந்தியெடுத்து 499 மதிப்பெண்கள் எடுப்பது ஒன்றும் சுலபமில்லை...
படிக்கும் காலத்தில் நாங்களும் இப்படி மதிப்பெண்களுக்காக முட்டிமோதி படித்ததுண்டு... அறிவியல் புத்தகங்கள் ஒவ்வொன்றும் பெரிதுபெரிதாய் இருக்கும்.. இப்போது அதிலிருந்து ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் விடை தெரியுமா என்று தெரியவில்லை!
புத்தகத்திலுள்ள ஒரு வரியைக் கூட விடாமல் படித்த நமக்கு, இப்போது ஏன் அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் விடை தெரிவதில்லை... மதிப்பெண்களை மட்டுமே குறியாக வைத்து படித்த நாம் அதில் சொல்லப்பட்ட விசயங்களை மறந்துவிடுகிறோம்.
கடைசியில் நாம் படித்தது நம் வாழ்க்கைக்கும் பயன்படுவது இல்லை... மற்றவர்களுக்கும் பயன்படுவதில்லை...
இப்படியாகத் தன் வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளம்...
கல்லாத எத்தனையோ அறிஞர்களைப் பற்றிப் படித்திருப்போம்..அவர்கள் பள்ளிக்கூடம் பக்கமே செல்லாதவர்களாக இருந்திருப்பார்கள். பின் எப்படி அவர்களால் மட்டும் அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்க முடிந்தது?
தங்கள் அனுபவித்தினால்... தங்கள் நண்பர்கள் தங்களுடன் பகிர்ந்து கொண்ட விசயங்களை வைத்து... தங்கள் வாழ்க்கையில் அதைச் செயல்படுத்தி ஒன்வொன்றாகக் கண்டுபிடித்தார்கள்..
அனுபவக் கல்வியே அனைத்திலும் சிறந்தது...
பேருந்தில், ரயிலில், ஆட்டோவில் பிரயாணம் செய்தால்... அருகிலுள்ளவர்களிடம் பேசுவோம்.. அவர்களைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.. இன்னும் நிறைய அவர்களுடன் உரையாடுவோம்.. நம் அனுபவ அறிவை வளர்த்துக் கொள்வோம்.
இனிய இரவு வணக்கங்களுடன்
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக