அநேக மக்கள் என்னைப் பார்த்துக் கொண்டு தான்
தங்கள் நாட்களைத் தொடங்குவார்கள்...
ஆனால் ஒருநாளும் என்னைப் பற்றிச்
சிந்தித்ததே கிடையாது!
நானும்
அனுதினமும் அவர்கள் அறையில்
செய்யும் வேலைகளை எல்லாம்
கணக்கிட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்!
அயராது வேலை செய்கிறார்கள்!
அயர்ந்து தூங்குகிறார்கள்!
சிலர்
ஆழ்ந்து சிந்திக்கிறார்கள்!
நேர மேலாண்மை வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள்!
ஒரு நொடி கூட
என்னைப் பற்றி நினைத்ததில்லை!
ஒரு நொடி கூட நிற்காமல் சுற்றும் என்னைப்
பார்த்தால் புரியும்
உங்களுக்கு
நேரத்தின் அருமை!
என்னைப் பார்க்கும் போது
உங்களுக்குள்
தோன்றும் எண்ணங்கள் யாவும்
உங்களை
ஒருபடி முன்னேற்றிச் செல்லும்!
உங்களுடன்
உங்களுக்காக
இருக்கும் என்னையும்
சிறிது நேரம் பொருட்படுத்துங்கள்!
அன்புடன்
நொடி முள்.
இனிய இரவு வணக்கங்களுடன்.
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக