இன்று கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு முக்கியமான நாள்.. அது தான் 'விபூதி புதன்'... அதாவது, நெற்றியில் சாம்பல் வைத்து, ஒருசந்தி (விரதத்தை) நாற்பது நாட்கள் கடைபிடிப்பது. இன்று காலை ஆலயத்திற்குச் சென்றிருந்தேன்.. இன்று சொன்ன மறையுரையைக் கவனிக்காவிட்டாலும், பீடத்தில் எழுதப்பட்டிருந்த மூன்று வார்த்தைகள் தான், என்னை மிகவும் கவர்ந்தன.
தனித்திரு – விழித்திரு – ஜெபித்திரு
இதுதான் இந்த நாளுக்குரிய சாராம்சம்... அதாவது தனி அறையில், விழித்திருந்து, கடவுளிடம் தங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் ஜெபிக்க நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும்....
இரண்டு நாட்களுக்கு முன், நான் எழுதிய தனிமை பற்றிய வரி தான் என் நினைவிற்கு வந்தது. இந்த வார்த்தைகளைப் பார்த்ததும் நான் புரிந்து கொண்டது இதுதான்...
'நீ தனிமையில் விடப்பட்ட நிலையில்
விழித்திருந்து உன் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளாதே!
உன் ஜெபத்தில் நிலைத்திரு!
நான் என்றும் உன்னோடு இருக்கிறேன்!'
என்று இறைவன் கூறுவது போல உணர்ந்தேன்... என்றும் இறைவன் உடனிருப்பு நம்மோடு இருப்பதாக!
நமக்கு ஆயிரம் கவலைகள் இருக்கலாம்... அல்லது கவலைகள் வரலாம்....
ஆனால், எதற்கும் சோர்ந்து போகத்தேவையில்லை...
வானத்துப் பறவைகளுக்கே உணவு கொடுக்க மறக்காத இறைவன் நம்மை விட்டுவிடுவாரா?
இந்த மாதம் முழுவதும் இறைவன் நம்மோடு இருந்து, அவர்வழி நடத்துவார்!
இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக