உள்ளொன்று வைத்து வெளியொன்று நடிக்கும்
வெளிப்படையாய் சொல்லத் தெரியாது
சில நேரங்களில் கண்கள் மட்டுமே பேசும்
உன் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளும்
உன்னைத் தொந்தரவு செய்யாது
உன்னைக் காண ஆவல் கொள்ளும்
உன் பேச்சைக் கேட்கத் துடிக்கும்
உன் அருகில் அமர ஆசைப்படும்
உன் இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருக்கும்
நீ பேசினால் உன்னைப் பற்றியே விசாரிக்கும்
நீ பேசாவிட்டால் உன்னைப் பற்றியே நினைக்கும்
ஆயிரம் கவலைகள் இருந்தாலும்
புன்னகையை மட்டுமே வெளிப்படுத்தும்
பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காது
தன்மானத்தை விட்டுக் கொடுக்காது
சில நேரங்களில் கோபித்துக் கொள்ளும்
சில நேரங்களில் அன்னையாய் மாறித் தாலாட்டும்
சில நேரங்களில் அரக்கியாய் மாறிக் கடுப்பேற்றும்
உன்னை யாரிடமும் விட்டுக் கொடுக்காது
உன்னையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது
இதை வாசிக்கும் நீ
இதற்கான விடையைக் கண்டுபிடித்தால்
நீ யாரையோ உண்மையாக அன்பு செய்கிறாய் என்பது உறுதி.
அது உன் அம்மாவாகக் கூட இருக்கலாம்.
விடை :- அன்பு, காதல்
இனிய இரவு வணக்கங்களுடன்
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக