இன்று.... நானும், என் அம்மாவும் பேசிக் கொண்டிருந்தோம். நாம் எப்படிப் பிறந்தேன், எத்தனை மணிக்கு பிறந்தேன்! எங்கு பிறந்தேன்! என்றெல்லாம் என் அம்மா விளக்கிக் கொண்டிருந்தார். கேட்கவே ஆசையாக இருந்தது. இப்போது தான் சிறு குழந்தையாகத் தவழ்ந்தது போல் இருந்தது. அதற்குள் இருபத்தைந்து வருடங்கள் கடந்துவிட்டன.
எப்போதுமே சிறு குழந்தைகள் என்றால் எல்லோருக்கும் பிரியம். நான் சிறு குழந்தையாக இருந்தபோது, யார் யாரெல்லாம் என்னைக் கொஞ்சி இருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
யார் யாரெல்லாம் என்னைத் தூக்க ஆசைப்பட்டிருப்பார்கள்?
யார் யாரெல்லாம் நான் தூங்கும் போது இரசித்திருப்பார்கள்?
யார் யாரெல்லாம் என்னைப் பேசச் சொல்லிக் கேட்டிருப்பார்கள்?
யார் யாரெல்லாம் என்னை முத்தமிட்டிருப்பார்கள்?
இவற்றை எல்லாம் எண்ணும் போதே, மனதில் ஒரு பசுமை உணர்வு.
நல்ல மழைக்காலம் போல், தினமும் மாலை மழை பெய்வது இன்னும் மனதில் பசுமை உணர்வைத் தூண்டுகிறது.
பாரதியுடனும், செல்லமாவுடனும் உரையாடுவது ஒரு புதுவித அனுபவம்.
புதிதான ரோஸியும், மேரியும் சேர்ந்துள்ளனர்.
நம்மைச் சுற்றி நல்ல மனிதர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, நம்மைச் சுற்றி பசுமையான செடிகள் இருக்கும்போது மனது தூய்மையடைகிறது.
இன்னும் புதிதாக எங்கள் குடும்பத்தில் சேர, அம்லுவின் தம்பி, அவன் அம்மா வயிற்றுக்குள் காத்துக் கொண்டிருக்கிறான்.
இவற்றை எல்லாம் எண்ணும் போது மனம் லேசாகிறது.
இதே உணர்வோடு, இந்த வாரம் இனிமையானதாக அமைய அனைவரையும் வாழ்த்துகிறேன்.
இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக