சனி, 4 மார்ச், 2017

ஜெபமே ஜெயம்...

'நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்லது செய்ய நினைக்கும் போது, உங்கள் விண்ணகத்தந்தை அதைவிட மேலாக நினைக்க மாட்டாரா?'

இந்த உலகில், நம்மை அதிகமாக அன்பு செய்பவர்கள், நம் பெற்றோர் தான்.. அவர்கள் காட்டும் அன்பை விட, நம்மை, தாயின் கருவில் உருவாகுமுன்னே தெரிந்து கொண்டவர், நம் இறைவன்.. அவர் எவ்வளவு நல்லது செய்ய நினைப்பார்!

ஆனால், நமக்கு நடக்கக் கூடாதது எதாவது நடந்து விட்டால், உடனே அவரைப் பழித்துரைக்கிறோம். அப்படி செய்தல் கூடாது. நமக்கு நடக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் உண்டு. அவர், அதிகமாக அன்பு செய்வர்களைத் தான், அதிகமாகச் சோதிப்பார்.. ஆனால், ஒருபோதும் கைவிடமாட்டார்.

அவரைப் பற்றிக் கொள்ள நாம் செய்ய வேண்டியது... ' ஜெபம்.. ஜெபம்... ஜெபம்...'

ஜெபம் மட்டும் தான்!

கண்டிப்பாக உன் குரல் கேட்கப்படும்!

இனிய நல் வணக்கங்களுடன்,

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: