புதன், 8 மார்ச், 2017

எதிர்பார்ப்பு....

எதிர்பார்ப்புகள் குறையும் இடத்தில் கவலைகள் இருப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால், எதிர்பார்ப்பையும், காத்திருத்தலையும் அன்பின் வெளிப்பாடுகளாகத் தான் நினைக்கிறேன், நான்.

'நான் உனக்குச் செய்கிறேன்' என்பதற்காக 'உன்னிடமிருந்து நானும் எதிர்பார்க்கிறேன்' என்பதல்ல இதன் அர்த்தம். நான் உனக்குச் செய்கிறேன்! அதற்குப் பத்து சதவீதமாவது நீ தகுதியுள்ளவளாக இரு என்பது தான் எதிர்பார்ப்பு.

நம் எதிர்பார்ப்பு உடனே கிடைக்கும் அல்லது நிறைவேறும் என்பது சாத்தியமல்ல. ஆனால், அதற்காகக் காத்திருப்பதில் தவறொன்றுமில்லை...

இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளுடன்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: