வெள்ளி, 10 மார்ச், 2017

ஆசையாய் இருக்கிறது!

குளித்துவிட்ட பின்னும்
இன்னும் ஒருமுறை குளிக்க ஆசை!
உடம்பிற்கு ஒத்துக்காது
என்றெல்லாம் எண்ணுவதே கிடையாது!
உன்னுடன் சேர்ந்து நானும்
குதித்தாடும் போது....
நீ என் கவலைகளை எல்லாம்
என்னிலிருந்து அகற்றுவது போன்ற
ஒரு உணர்வு!
உன்னிடம் நிறைய பகிர்ந்து
கொள்ள வேண்டுமென்று
ஆசையாய் இருக்கிறது!
வந்த சில நிமிடங்களில்
ஓடோடி மறைந்துவிடுகிறாய்!
ஆனால் உன்னில் மட்டும்
கவலை  என்பதே கிடையாது போல!
எப்போது பூமிக்கு வந்தாலும்
சிரிப்பொலியை மட்டும் எழுப்புகிறாய்!
எங்கள் வாழ்விலும்
விளக்கை ஏற்றுகிறாய்!
எங்களையும் சிரிக்க வைக்கிறாய்!
நீ என்னைத் தழுவும் போது
உன்னைக் கட்டி அணைத்து
முத்தமிட ஆசையாய் இருக்கிறது!
அடுத்து எப்போது வருவாய் என்
மழை ராணி!

ஆவலுடன் காத்திருக்கும் உன் அன்புத் தோழி,
இனியபாரதி.

கருத்துகள் இல்லை: