செவ்வாய், 7 மார்ச், 2017

மகளிர் தினம்...

நாளை... மார்ச் 8. அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.. பெண்கள் தினம்....

'மங்கையராப் பிறப்பதற்கே நல்ல
மாதவஞ் செய்திட வேண்டுமம்மா'
என்றார், பாரதியார்.

ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் ஏன் மகளிராய் பிறந்தோம்
என்று எண்ணத் தோன்றுகிறது!

ஒரு பெண்மையின் புனிதத்தை உணர்ந்த எவராலும்
பெண்களைக் கொச்சப்படுத்த முடியாது!

பெண் - என்ற வார்த்தையே அழகானது!

பெண்மை – அதைவிட அழகானது!

ஆனால், இந்தக் காலத்தலைமுறைகள், அந்தப் பெண்மையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அது நிதர்சனமான உண்மை தான்.

ஒரு ஆணானவன் என்று ஒரு பெண்ணை அடிமையாக நினைக்கிறானோ
அன்றே அவன் வாழ்வில் இருண்ட நாள் தொடங்குகிறது!

அதே போல் பெண்ணானவள் என்று ஒரு ஆணை மதித்து நடக்காமல்  இருக்கிறாளோ
அன்றே அவள் வாழ்க்கை முடிந்துவிடுகிறது!

பெண்மையும் ஆண்மையும்
சமமாக மதிக்கப்பட வேண்டியது!

மதித்து வாழ்வோம்! உயர்வு பெறுவோம்!

இனிய மகளிர் தின வாழ்த்துகளுடன்,

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: