ஞாயிறு, 5 மார்ச், 2017

சோதனை...

நேற்றைய செய்தியோடு ஒத்திருந்தாலும்.. இன்று சோதனையைப் பற்றிய மறையுரையைக் கேட்டது, ஒரு தெம்பைத் தந்தது.

ஆயிரம் சோதனைகள் வரலாம். மனம் தளரக் கூடாது. எங்கள் வீட்டின் அருகில் ஒரு அக்கா இருந்தார். புதிதாகத் திருமணம் ஆனவர். தன் மாமியாருடன் சண்டை காரணமாகத் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கேட்கவே வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

இந்த உலகில், நம்மை விட, துன்பப்பட்டுக் கொண்டு, நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை, நாம் முதலில் உணர வேண்டும். எதற்கெடுத்தாலும் தற்கொலை, கொலை மிரட்டல்... இதுபோன்ற செயல்கள் எல்லாம் சாத்தானிடமிருந்து வருபவை.

நாம் எப்போதும் மற்றவர்க்கு 'எட்டாக் கனியாகத்' தான் இருக்க வேண்டும். 'எட்டாக் கனி' என்றால் - நம்மைப் பற்றி யாரும் பேச முடியாதவாறு நடந்து கொள்வது.

சோதனைகள் வரும்போது, அதை எதிர்கொள்ளும் சக்தியை இறைவனிடம் வேண்டுவோம்.

அவர் எப்போதும், நம்முடன் இருந்து வழிநடத்துவார்!

இனிய இரவு வணக்கங்களுடன்...

இந்த வாரம் இனிய வாரமாகட்டும்....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: