காணத்துடித்த என் கண்கள்
களைப்பைக் கூட உணராமல்
தாவிக்குதித்த என் கால்கள்
ஓடி வருகின்றேன்
உன் பிஞ்சு விரல் ஸ்பரிசத்திற்காய்!
மூன்றாம் தளத்தில் இல்லையென்று
இரண்டாம் தளம் விரைந்தோடுகிறேன்!
தேடினேன்! கண்டேன்!
என் குட்டி இனியனை!
வாரி எடுத்து முத்தமிட ஆசை!
சூழ்நிலை சரியில்லை!
உன் பிஞ்சுக்கால் விரல்களை
வருடிய அந்தத் தருணம்
ஆயிரம் தேனருவிகள்
பாயும் அளவிற்கு ஆனந்தம்!
இடையே அம்லுவின் ஆசையால்
உன் கன்னங்களைத் தீண்டும்
பாக்கியமும் கிடைத்தது!
உன்னைப் பார்த்ததே ஒரு வரம் தானே!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக