சிலருக்கு உதவும் மனப்பான்மை பிறவியிலிருந்தே இருக்கும். சிலருக்கு குழந்தையாக இருக்கும் போது... சிலருக்கு இளம் பருவத்தில்... சிலருக்குத் திருமணத்திற்குப் பின்... சிலருக்குக் குழந்தைகள் பிறந்தபின்... சிலருக்கு முதியவரான பின்... சிலருக்கு மற்றவருக்கு உதவ வேண்டுமென்ற எண்ணமே வராது... சிலருக்கு வந்தாலும் 'தான் கஷ்டப்பட்டு உழைத்ததை, மற்றவருக்கு ஏன் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் வந்துவிடும்'... இப்படிப் பாதிப் பேர் ஒதுங்கிக் கொள்வதால் தான், நம் நாட்டில் பஞ்சம் இன்னும் தலைவிரித்தாடுகிறது.
இதற்கெல்லாம் காரணம் நம் தலைமுறை அல்ல...
நம்மை வளர்த்தவர்கள் தான்...
முன்பெல்லாம் ஒரு குடும்பத்தில் பத்து பேர், பதினாறு பேர் என்று இருப்பார்கள்.. அனைவரும் பகிர்ந்துண்டு வாழ்ந்தனர்..
நம் பெற்றோர் காலத்தில் வீட்டிற்கு ஐவர் இருந்தனர்.. அப்போது பகிரும் மனப்பான்மை கொஞ்சம் குறைந்தது.
நம் பருவத்தில், வீட்டிற்கு இரண்டு குழந்தைகள் என்று இருந்தனர். எதற்கெடுத்தாலும் இருவரும் சண்டை போடுவது தான்...
இப்போதுள்ள குடும்பங்களில் ஒரே ஒரு குழந்தை மட்டும் இருக்கின்றது.. இதனால் அந்தக் குழந்தைக்குத் தான் எல்லாம் என்ற மனப்பான்மையில், அதை வளர்த்துவிடுகிறோம்!
இனிவரும் காலங்களில் எப்படி இருக்குமோ என்று யோசிக்கவே முடியவில்லை! பின் எப்படி, மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் குழந்தைகளுக்கு வரும்?
நாம் தான், நம் குழந்தைகளுக்கு, எது நல்லது, எது கெட்டது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். இனிவரும் நாட்களிலாவது, நம் குழந்தைகளுக்கு எவ்வளவு நல்ல விசயங்களைச் சொல்லிக் கொடுக்க முடியுமோ, சொல்லித் தருவோம்!
இனிவரும் சமுதாயம், மற்றவர்க்கு உதவுதன் பலனை அனுபவிக்கட்டும்!
இனிய இரவு வணக்கம்,
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக