வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

Teddy Day...

இன்று டெட்டி டேவாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக அன்பின் சின்னமாகவும், பெண்கள் அதிகம் விரும்புவதாகவும் இந்த டெட்டி பொம்மைகள் உள்ளன. குழந்தைகள் கூட மிகவும் விரும்பும் விளையாட்டுப் பொருட்களில் இதுவும் இருக்கும்.

கடைகளில் டெட்டி பொம்மைகளைப் பார்க்கும் போது, முகம் மலராதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு தாக்கத்தை நம் மத்தியில் இந்த டெட்டி பொம்மைகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

காதலர் தினத்திற்கு முந்தைய வாரத்தில் இருக்கிறோம்.
நம் அன்பிற்குரியவர்களுக்கு, இந்த டெட்டி பொம்மைகளை வாங்கிப் பரிசளிப்பது சாலச் சிறந்ததென்று நினைக்கிறேன்.

என் அறையிலும் என் அன்பிற்குரிய ஒரு அழகான டெட்டி பொம்மை உள்ளது. அடிக்கடி அவளுடன் பேசும் பழக்கம் உண்டு. இன்று தூங்குவதற்கு முன்பு, அதை ஒருமுறை முத்தமிட்டு விட்டுத் தூங்க வேண்டும்.

இனிய நாள் வாழ்த்துகள்!

இனியா.

கருத்துகள் இல்லை: