நன்றாய் தூங்க
அழகாய் சிரிக்க
முத்தங்கள் பெற்றுக் கொள்ள
அள்ளி அணைக்க
அன்பு மழை பொழிய
ஆறுதல் பெற
பள்ளி செல்ல
நண்பர்களைத் தேட
ஆசிரியர்களுடன் நன்கு பழக
தெருவில் ஓடியாடி விளையாட
கல்லூரி செல்ல
காதலில் விழ
எழுந்து முன்னேற
குறிக்கோள்களை நோக்கி ஓட
மற்றவர்களை நம்பி ஏமாற
கடைசியில் ஒரு மூலையில் அமர்ந்து புலம்ப
மனதை மாற்றி வாழ்க்கையைப் பார்க்க
ஓரளவு தன் தரத்தை உயர்த்திக் கொள்ள
விரும்பிய வாழ்க்கையை அடைய
அந்த வாழ்க்கையை அழகாய் வாழ
குழந்தைகளுடன் இன்புற்றிருக்க
நம் குழந்தைப் பருவத்தை எண்ணி கண் கலங்க
குழந்தைகளுக்கு ஞானத்தையும் அறிவையும் கொடுக்க
அவர்களின் தேவைகளை நிறைவேற்ற
அவர்களின் நல் வாழ்க்கையைக் கண்முன் காண
அப்படியே தன் வாழ்க்கை முடிந்துவிட்டாலும் மகிழ்ச்சி என்று நினைக்க
இப்படி
எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு....
அந்தந்த காலத்தில் அவையவை நடக்கும்!
குழப்புதா? அதுக்குத் தான் இதை எழுதினேன்!!!
இனிய இரவு வணக்கங்களுடன்.
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக