புதன், 8 பிப்ரவரி, 2017

வெளிப்படுத்துவோம்!

கோபமாக இருந்தாலும் சரி
சந்தோசமாக இருந்தாலும் சரி
பாசமாக இருந்தாலும் சரி
அன்பாக இருந்தாலும் சரி
அதை வெளிப்படுத்த ஒருவகையான
தைரியம் வேண்டும்!
தைரியம் பிறக்கின்ற மாதம் தான்
பிப்ரவரி!
இப்போது கல்லூரிகளை விட
பள்ளிகளிலேயே
காதலர் தினம் பற்றி அதிகம் பேசப்படுகிறது!
இந்த மாதத்தில்
கடைவீதிகளில் இருக்கும்
கிப்ட் கடைகள் எல்லாம்
நிரம்பி வழியும்!
இன்றைய தினம்
நமது அன்பை மற்றவர்க்கு
வெளிப்படுத்தும் நாள்!
மற்றவர்கள் என்றால்
அது
அம்மாவாக இருக்கலாம்
அப்பாவாக இருக்கலாம்
தங்கையாக இருக்கலாம்
தம்பியாக இருக்கலாம்
தோழனாக அல்லது தோழியாக இருக்கலாம்!
நமக்கு
அவர்கள் மீதுள்ள அன்பை
வெளிப்படுத்துவோம்!

அனைவருக்கும்
அன்பின் வாழ்த்துகள்!

இனியா.

கருத்துகள் இல்லை: