செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

இதுவல்லவே வழி!

நான்
சென்று கொண்டிருக்கும் பாதை
சரி என்று எனக்கு மட்டுமே தெரியும்!
அந்த வழி வழியே
யாரும் வர இயலாது!
இவ்வழியே வர விரும்பினால்
தன்னலம் முற்றிலும் கூடாது!
வழியோரம் நான்
கண்பதென்னவோ வெறும்
முட்களும் புதர்களுமே!
களைப்படைந்து சிறிது நேரம்
இளைப்பாற விரும்பி நான்
அமரும் இடமெல்லாம்
விசமம் சூழ்ந்த முட்செடிகள் தான்!
அதனால் எனக்கு இளைப்பாறக்
கூட நேரமில்லை!
என் வழிநெடுகிலுமுள்ள
சில மருந்துச் செடிகளை நான்
அழைக்கிறேன்!
என்னுடன் வரும்படி!
ஆனால் அவற்றிற்கு அந்த
முச்செடிகள் தான் சிறந்த
நண்பர்களாம்!
அந்த மருந்துச் செடிகளும்
முட்செடிகளுடன் சேர்ந்து
விசமமாயின!
கடைசியில்
நான் மட்டும் அந்தப் பாதையில்
தனியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன்!
என்னைப் பார்த்து இந்த உலகம்
புன்னகைக்கிறது!
ஆனால் எனக்கு அதில் ஒன்றும்
கவலையில்லை!
என்றாவது ஒரு நாள் உன்னைப்
பார்ப்பேன் என்ற எண்ணத்துடனே
பயணிக்கிறேன்!

என் பயணம் இனிதாக அமையும்!

இனியா.

கருத்துகள் இல்லை: