ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

இந்த மாதம்...

இந்த மாதம் மற்றவர்களுக்கு எப்படியோ, ஆனால் எனக்கு மிகவும் மோசமான மாதமாக அமைந்துவிட்டது. அதுவும் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்களாக, இந்த ஐந்து நாட்களும் இருந்தன. எங்கள் பள்ளி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வேண்டுமென்று, ஆவலோடு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தயாரித்துக் கொண்டிருந்தேன். கடைசியல் கலந்து கொள்ள முடியாவண்ணம் எல்லாம் அமைந்துவிட்டது.

அதிகம் ஆசைப்படக் கூடாது என்பது இதற்குத் தான் போல... ஆஸ்பத்திரி வாசல் ஆரம்பிச்சு பள்ளிவாசல் வாசல் வரை சென்று வந்தாச்சு... காய்ச்சல் குறைந்த பாடில்லை.... ஒரு பக்கம் அம்மாவின் திட்டு...மறுபக்கம் அப்பாவின் கரிசணை... இன்னொரு பக்கம் தங்கையின் கோபத்திற்கு மத்தியில் கஞ்சி சாப்பாடு... இன்னொரு பக்கம் தோழிகளின் அழைப்புகள்..

ஒரு வழியாக இன்று எழுந்து அமரும் அளவிற்கு இருக்கிறேன். நான்கு தினங்களுக்கு முன்பிருந்த என்னையும், இன்று என் அறையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் என்னையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

கண்டிப்பாக... ஒன்றை மட்டும் இங்குப் பதிவிட விரும்புகிறேன்...
பெற்றவர்களைத் தவிர வேறு யாரும் நம் துன்பத்தில் உடனிருக்க மாட்டார்கள்.

இனிவரும் வாரமாவது இனிதாக அமையட்டும்
இனியா.

கருத்துகள் இல்லை: