ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

Hug Day...

நேற்றைய தினம், வாக்குறுதி கொடுத்துவிட்ட நாம், இன்று நம் அன்புக்குரியவர்களைக் கட்டி அணைக்கும் தினம்.

அன்புக்குரியவர்கள் என்பது... நம் தாயிலிருந்து தாரம் வரை அனைவரும் அடங்குவர்.

சிறுவயதில் நம்மைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு இருக்கும் தாய்!

வளரும் வயதில் நம்மைத் தன் தோள் மேல் போட்டு அணைத்துக் கொள்ளும் தந்தை!

மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, தாத்தா, பாட்டி இப்படி எல்லோருமே தங்கள் அன்பை வெளிப்படுத்த நம்மைக் கட்டி அணைத்ததுண்டு!

'Hug' என்று சொல்லும் போதே என் நினைவிற்கு ஒரு விசயம் வருகிறது. நாம் சிறுவயதில் மற்றவர்களைக் கட்டிப் பிடிக்கும் போது யாரும் ஒன்றும் சொல்வதில்லை... இதுவே இளம் பருவத்தில் யாரும் அனுமதிப்பதில்லை...

ஆனால்... எனக்கு ஒரு அனுபவம் உண்டு. அடிக்கடி இது என் நினைவிற்கு வரும். நான் கல்லூரி முடித்து, என் வீட்டிற்கு வந்த ஒரு சில வருடங்கள் கழித்து, என் அன்பிற்குரிய அண்ணன் ஒரு நாள் என் வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்... காரணம்...நான் வீட்டில் செய்த தொல்லை தாங்க முடியாமல் என் அம்மா அழைத்திருந்தார்.
அவரும் வீட்டிற்கு வந்தார். அவர் வந்தவுடன், நேராக அவரிடம் சென்று அவரைக் கட்டிப் பிடித்து, அவர் தோள் மீது சாய்ந்து அழுதேன். என் அம்மா என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்று கூறி அழுதேன்... அந்த நாள் என்னால் என்றும் மறக்க முடியாத நாள்..

ஆக... கட்டிப் பிடித்தல் காதலர்கள் மட்டும் செய்வது கிடையாது.

நம் அண்ணன்....

அக்காள்...

தம்பி...

தங்கை...

நண்பர்களிடமும்...

காமமில்லா கட்டிப்பிடித்தல் இருக்கத்தான் செய்கிறது.

உளவியல் செய்தி ஒன்று சொல்கிறது... கட்டிப் பிடிக்கப்படுவதினால் நம் மனஅழுத்தம் குறையும் என்று!

எது எப்படியோ!

இன்று ''Hug Day"
நாம் அன்பு செய்யும் ஒவ்வொருவரையும், ஒரு ஹக் கொடுத்து அவர்களை எவ்வளவு அன்பு செய்கிறோம் என்பதைக் காட்டுவோம்.

இந்த வாரம் இனிய வாரமாகட்டும்!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: