திங்கள், 6 பிப்ரவரி, 2017

அதுவா? இதுவா?

எல்லாம் ஒன்றாக இருக்கும் வரையில் சண்டையே வருவதில்லை.. அதுவே இரண்டு என்று வைத்துப் பார்க்கும் போது, எல்லாமே சண்டையில் தான் முடிகிறது.

உதாரணத்திற்கு
நானும் தங்கையும் என்றால்... எல்லாவற்றிலும் இரண்டு பாகங்கள் போட வேண்டும். இதுவே நான் மட்டும் என்றால், பாகம் போடத் தேவையில்லை. எல்லாம் எனக்கென்று ஆகிவிடும். என்னை யாரும் கேள்வி கேட்கவும் மாட்டார்கள்.

இதுபோல் வாழ்க்கையில் நாம் பலவற்றை உதாரணங்களாக எடுத்துக் கொள்ளலாம்.

பணம் எனக்கு முக்கியம் தான்... ஆனால், நான் இறைவனை நாடாமல், அந்தப் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவளானால், என்னால் இறைவனுக்கு முழுமையாக என்னைக் கொடுக்க முடியாது. இது பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு வரி.

ஆகையால் பணம், இறைவன் இவற்றுள் எதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பது என்னைப் பொறுத்ததே!

ஒரு வேளை நான் இன்று பணத்தைத் தேடிக் கொள்கிறேன்... வயதான பின்பு இறைவனைத் தேடுகிறேன் என்றிருக்கலாம்.. ஆனால், அதுவரை அவர் காத்திருப்பாரா என்பது தெரியவில்லை!

இப்படி ஒவ்வொருவர் தேடலும் ஒன்றை மட்டும் நாடாமல், பலவற்றை நாடித் தேடி அலைந்து கொண்டிருப்பதே பல விதமான சண்டை சச்சரவுகளுக்கும், வெறுப்புகளுக்கும் காரணமாகிவிடுகிறது.

இன்று நான் ஒரு முடிவெடுத்தேன்...

எனக்கும் இதுபோல் பல வித குழப்பங்கள் மனதில் எழும் போது, என் நோக்கம் என்ன என்பதை மட்டும், எப்போதும் என் கண்முன் இருத்தி, அதை மட்டும் என் வாழ்வாக்க வேண்டும்.

மாயவித்தைகளுக்குள் மாட்டிக் கொள்ளாமல் என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

இறைவன் அருள் என்றும் நம்மோடு,
இனியா.

வருகின்ற நாட்கள் நட்சத்திரங்களாய் ஜொலிக்கட்டும்.

கருத்துகள் இல்லை: