வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

ஏமாந்த கிளி!

ஒரு ஊரில் பச்சை வண்ணக் கிளியும்
சிவப்பு வண்ணக் கிளியும்
சந்தோசமாகத் தங்கள் வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருந்தனர்.
ஒரு காலத்தில்
சிவப்பு வணணக்கிளிக்கு
பச்சைக் கிளி மீது காதல் வந்தது!
தன் காதலை
அந்தப் பச்சைக் கிளியிடம்
சொன்னது!
அதற்கு
அந்தப் பச்சைக் கிளி....
எனக்கு சிவப்பு நிறமே பிடிக்காது!
ஒருவேளை
நீயும்
என்னைப் போல்
பச்சை நிறமாய் இருந்திருந்தால்
பிடித்திருக்கும்!
என்றது.
உடனே அந்தச் சிவப்புக் கிளி
தன்னைப் பச்சை வண்ணமாய் மாற்ற
யாரால் முடியும் என்று யோசித்துக் கொண்டே
ஊர் ஊராய் சுற்ற ஆரம்பித்தது!
வெகுநாட்கள் அலைந்தும்
அதனால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை!
கடைசியாக சோர்ந்து போய்
ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்தது!
அந்த மரத்தடியில்
ஒரு காதல் ஜோடி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது.
பெண்: என் அப்பாவிற்கு அழகான, நன்கு படித்த மாப்பிள்ளை தான் வேண்டுமாம்? அதனால் நாம் பிரிந்து விடுவோம்!
ஆண்: உனக்கு நல்லதென்று தோன்றுவதைச் செய்!

சில நாட்கள் கழிந்தன.

அந்தப் பெண்ணும் தன் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டாள். ஆனால், அவள் விரும்பியபடி சந்தோசமாக இல்லை. அந்த ஆணுக்கும் ஒரு அழகான பெண்ணுடன் திருமணம் நடந்து சந்தோசமாக இருந்தான்.

ஞானம் பெற்றது கிளி!

தன் இறக்கைகளை அடித்துக் கொண்டு அந்தப் பச்சைக் கிளியைப் பார்க்கச் சென்றது.
அதனிடம்,
'உன்னைத் தேடித் தேடி அன்பு செய்பவரை நீ உதாசீனப்படுத்தினால் கடைசியில் நீ தான் மகிழ்ச்சியை இழந்தவள் ஆவாய். என்னையும் என் அன்பையும் உள்ளவாறு ஏற்றுக் கொள்பவளுக்காகக் காத்திருப்பேன்'
என்று கூறிச் சென்றதாம்.

இங்கு ஏமாந்த கிளி யார்?

நம் வெளித் தோற்றத்தைப் பார்த்து வருவதல்ல காதல்.

நம்மை நாம் இருப்பவாறு, அன்பு செய்யத் தூண்டுவதே உண்மையான காதல்.

ஒருவரை முழுமையாக நம்மவளாக ஏற்றுக் கொண்ட பின்னரே காதல் கனி இனிக்கும்!

இனிக்கட்டும் நம் காதலும்!

அன்புடன்,
இனியா.

கருத்துகள் இல்லை: