புதன், 1 பிப்ரவரி, 2017

மனதில் பட்டதைச் சொல்...

இன்று நான் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தேன். நான் ஏறி அமர்ந்த பிறகு, என்னைத் தொடர்ந்து ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க அம்மா, அந்த ஆட்டோவில் ஏறினார். ஏறியவுடன் என் கைப்பையைப் பார்த்து 'அழகாய் இருக்கிறது!' என்றார். நானும் நன்றி கூறினேன்..

பெரும்பாலும் நான் வெளியில் செல்லும் போது, யாராவது அழகாய் இருப்பதைப் பார்த்தால் அல்லது அவர்கள் ஏதாவது நன்மை செய்வதைப் பார்த்தால், அவர்களைப் போய் பாராட்ட வேண்டுமென்று தோன்றும். ஆனால், ஏதோ ஒரு வகையான கூச்சம் என்னைத் தடுத்து நிறுத்தும்.

இன்று இந்த அம்மாவைப் பார்த்ததும், அந்த உணர்வை என்னை விட்ட நீக்க வேண்டும் என்று உணர்ந்தேன். ஒரு விடயம் நமக்கும் பிடித்ததென்றால் அதைப் பாராட்டுவதில் தவறொன்றுமில்லை...

நன்றி அம்மா!

இனியா.

கருத்துகள் இல்லை: