இன்று சாக்லேட் டே... அதாவது சாக்லேட் எப்படி சுவை கொடுக்கிறதோ, அதே போல், நாமும் நம்மைச் சுற்றி இருக்கிறவர்களுக்கு சாக்லேட் தர வேண்டுமென்று பொருளில்லை... மற்றவர்களுக்கு கஷ்டங்கள் தரக் கூடாது என்று பொருள் கொள்ள வேண்டும்.
அருகில் இருக்கும் நம் உறவினர்களிடம் போய் பேசலாம்...
நம் நண்பர்களுக்குப் ஃபோன் செய்து பேசலாம்...
நம்மால் இயன்ற உதவிகளை இல்லாதவர்களுக்குச் செய்யலாம்...
நம் சகோதர, சகோதரிகளிடம் அன்பாய் பேசுவது...
நம்முடன் சேர்ந்து வேலை செய்பவர்களுக்கு உதவி செய்வது...
தெருவில் பார்ப்பவர்களிடம் ஒரு சிறு புன்னகை புரிவது...
நம் தாய் தந்தையை மதித்து நடப்பது...
பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது...
சிறு குழந்தைகளுடன் விளையாடுவது...
பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது...
இரவில் சீக்கிரம் தூங்கச் செல்வது...
மற்றவர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது...
மற்றவர்களின் நிலைமையைப் புரிந்து கொள்வது...
மற்றவர் தவற்றைப் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கொடுப்பது...
நம் உடல் நலனைக் கவனித்துக் கொள்வது...
உணவில்லாதவர்களுக்கு உணவு கொடுப்பது...
நம்மைத் தவறாக நடத்தும் இடத்தில் அவர்களைப் பொறுத்துக் கொள்வது...
நண்பர்களுடன் வெளியில் உணவருந்தச் செல்வது...
பிறந்த நாள் கொண்டாடும் நம் நண்பர்களுக்குப்
பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது...
தேடித் தேடி வாங்கும் குட்டிப் பொம்மைகள்...
இப்படி...
இந்த நன்னாளில், நிறைய நல்ல விசயங்கள் செய்யலாம்...
நாமும் சந்தோசமாக இருப்போம்!
நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் சந்தோசப்படுத்துவோம்!
'சாக்லேட் டே' சாக்லேட்டைப்போல் இனிக்க
வாழ்த்துகள்!
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக