அவளின் பாசத்தில் நம்பிக்கை வைத்து
அன்று முதல் இன்று வரை
அவளைத் தொந்தரவு செய்யாமல் இருந்ததால் தான்
இன்று அவள் இன்னொருவனின் மடியில்
தவழ்கிறாள் போல!!!
பாவம்...
அவளும் எத்தனை நாட்கள் தான்
ஒருவனுக்காய்க் காத்திருந்து இருப்பாள்????
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளின் பாசத்தில் நம்பிக்கை வைத்து
அன்று முதல் இன்று வரை
அவளைத் தொந்தரவு செய்யாமல் இருந்ததால் தான்
இன்று அவள் இன்னொருவனின் மடியில்
தவழ்கிறாள் போல!!!
பாவம்...
அவளும் எத்தனை நாட்கள் தான்
ஒருவனுக்காய்க் காத்திருந்து இருப்பாள்????
இனியபாரதி.
அவளின் பொறுமைக்கும்
ஓர் எல்லை உண்டென்பதை
அநேக நேரங்களில்
மறந்துவிடும் ஒரு இனம் மட்டுமே
அடுத்தடுத்து தவறுகள் புரிகின்றன...
இனியபாரதி.
நான் விரும்பும்
வாழ்க்கையும் நேரமும்
என்றாவது ஒருநாள்
என் வாசல் தேடி வரும் என்ற நம்பிக்கையுடன்....
இனியபாரதி.
அழியாமல் இருக்கும் காதலை
அழிக்க நினைக்கும் மனங்கள் பல...
அழிந்துபோன காதலை
உயிர்ப்பிக்க நினைக்கும் மனங்கள் பல...
அழியும் நிலையில் உள்ள காதலை
அழிய விடாமல் தடுக்க நினைக்கும் மனங்கள் பல...
எது எப்படி இருந்தாலும்
காதல் என்றும் அழியாது!!!
இனியபாரதி.
கனிவாய் அவள் பேசி
நான் பார்த்த நாட்களை
நினைத்துப் பார்க்கையில்
கண்களின் ஓரத்தில்
நீர் கசிவது மட்டுமே
தற்போதைய நிலை!!!
இனியபாரதி.
உன்னை அன்பு செய்ய
என்மீது உனக்குள்ள அக்கறை மட்டும் காரணமில்லை...
அதையும் தாண்டி
நான் உன் மீது கொண்டுள்ள அக்கறை தான் காரணம்...
இனியபாரதி.
நீ என்னை
வேண்டாம் என்று
வெறுக்க வெறுக்க
உன்னை
அதிகதிகமாய்
அன்பு செய்ய
என் மனம் துடிக்கிறது!!!
இனியபாரதி.
அவளைக் கண்டு கொண்ட பின்பும்
நான் அவளுடையவன்
என்பதை உணர்த்த
எத்தனைக் கஷ்டங்கள் படவேண்டி இருக்கு???
இந்தத் துன்பங்கள் எனக்கு வலியைத் தரவில்லை...
இன்னும் நீ என்னவளாக இருப்பதால்...
இனியபாரதி.
மயில் இறகே...
உன்னைப் போல் அழகு
எங்காவது உண்டா என்று
தேடிப் பார்க்கும் அளவிற்கு
இத்தனை அழகை
உன்னுள் எப்படி புதைத்து வைத்துள்ளாய்???
உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்தால்
என் கவலைகள் எல்லாம் மறந்து விடுகின்றன...
உன் அசைவில்
என் உடல் மெய் சிலிர்க்கிறது...
உன்னை என் அறைத் தோழியாய்
கொண்டதில் மகிழ்ச்சி!!!
இனியபாரதி.
அன்பைக் கூட
எப்போதும் கொடுப்பது
கடினம் தான் போல!!!
அந்த இடத்தை நிரப்பத் தான்
நண்பர்களைக் கடவுள் தந்துள்ளார்!!!!
இனியபாரதி.
அவனிடம்
எனக்கு
கம்மல்
வளையல்
மோதிரம்
கொலுசு
எல்லாம் வேண்டும்....
என்று சொல்....
எல்லாம் தங்கத்தில் வேண்டும் என்று சொல்...
அந்த நொடியிலேயே உன்னுடன் பேசுவதை நிறுத்தி விடுவான்...
இனியபாரதி.
நம் தேவை முடிந்தவுடன்
ஒருவருடன் பழகும் பழக்கத்தை
விட்டுவிட்டு ஓடுவது தான்
இன்றைய நாகரீகம்....
நமக்கு மதிப்பும் மரியாதையும்
இருந்தால் மட்டுமே
பேசும் உறவுகள் கூட்டம் ஒருபுறம்...
பணக்காரனாக இருந்தால் மட்டுமே சேரும்
நண்பர்கள் கூட்டம்...
இவை எல்லாம் இருந்தால் மட்டுமே
அன்பர்கள் கூட்டம்!!!
இனியபாரதி.
தீராத அவளின் காதல்
என்னை மெய்மறக்கச் செய்து
அவளை மட்டுமே
என்றும் எண்ணிக் கொண்டிருக்க
என் மனதைத் தூண்டுகிறது!!!
இனியபாரதி.
நான் நின்ற பின் வா என்றேன்...
உன் ஈரத்தில் நனைய ஆசைப்படுகிறேன் என்றாள்!!!
நான் ஓட வழி விடு என்றேன்...
என்னை அணைத்துவிட்டுச் செல் என்றாள்!!!
இறுதியில்...
நான் சென்று சேர்ந்த இடத்தில்
எனக்காய் கரையில் அமர்ந்து கொண்டு காத்துக் இருக்கிறாள்
இந்த இளைய மங்கை!!!
இனியபாரதி.
தூரத்தில் நின்று கொண்டு
யாரோ ஒருவருடன்
உரையாடிக் கொண்டிருந்த
அவளைக் கண்டதும்
என் உள்ளம் பதைபதைத்து
எதிர்த் திசையில்
ஓட்டம் பிடித்த நாட்கள்
மீண்டும் கிடைக்குமா?
இனியபாரதி.
அழகும் அறிவும்
அவளுக்கு இருந்தும்
கண்டு கொள்ளாமல் விட்டது
என் தவறு தான்...
இப்போது
எதைச் சொல்லி அவள் முகத்தில் விழிப்பேன்???
இனியபாரதி.
உன்னைக் கனிவுடன் கையாள
எனக்குத் தெரியவில்லை என்று தான்
என்னை விட்டு வெகு தொலையில் நின்று
எனக்கு வெளிச்சம் தருகிறாயோ?
நிலா
இனியபாரதி.
அவள் கொஞ்சம் திமிர் பிடித்தவள் தான்...
அவள் திமிரும் தான் எனக்குப் பிடிக்கிறது....
அவள் கொஞ்சம் கோபக்காரி தான்...
அவள் கோபமும் என்னைக் கவர்கிறது...
இப்படி என் வெட்கத்தை விட்டு
அவளை இரசிக்கும்
ஒவ்வொரு கணமும்
அவள் என்னைக்
கீழ்த்தரமாக நடத்துவாள் என்று
எதிர்பார்க்கவில்லை....
இனியபாரதி.
என் காயங்களுக்கு
மருந்தாய் இருப்பாள்
என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு
அவள் செய்தது என்னவோ
காயங்கள் கொடுத்தது
மட்டும் தான்...
அதையும் ஏற்றுக் கொண்டு
மெளனம் காக்கிறேன்....
இனியபாரதி.
பல நாள் முயற்சிக்குப் பின்
உன்னைப் பார்க்க வைத்த பெருமை
என்னை மட்டுமே சேரும்!!!
இனியபாரதி.
மற்றவரை மதிக்கத் தெரிந்தவர்
எப்போதும் குரல் உயர்த்த மாட்டார்!!!
அப்படியே உயர்த்தினாலும் அது
நேர்மையான வழியை நோக்கியதாய் இருக்கும்....
இனியபாரதி.
அறிவை விட அழகு உயர்ந்தது என்பதை
நாம் ஒரு இடத்தில் அனுபவிக்கும் போது
உணர்ந்து கொள்கிறோம்...
அங்கு நமது அறிவை மெய்ப்பிக்க ஒரு
வாய்ப்பும் கிடைக்க மறுக்கப் படுகிறது.
இனியபாரதி.
என்றோ ஒருநாள் நடக்கும் என்று
எதிர்பார்த்து நான் காத்திருந்த
ஒரு விசயம்....
இன்று நடக்காமல் போய் விடக் காரணம்....
நான் ஏழை என்பதாலா???
மறந்து விடாதே...
கோபுர நிழல் தரையில் தான் விழுகிறது என்று!!!!
இனியபாரதி.
நான் உன்னை அன்பு செய்வது
உண்மை என்பது உனக்கும் தெரியும்!!!
நீ இல்லாமல் இருக்க முடியாது
என்பது கூடத் தெரியும்!!!
அப்படி இருந்தும் என் சிறு பிழையை
பொறுத்துக் கொள்ள மறுப்பது
என்னை வதைப்பதற்குச் சமம்!!!
இனியபாரதி.
கவிதைகளில் சொல்ல வேண்டுமென்ற
என் முயற்சி
முற்றிலும் வீணாய்ப் போன நிலையில்
நேரிலாவது சொல்லிவிட வேண்டுமென்று
என்னைத் தூண்டுகிறது!!!
இனியபாரதி.
செல்லமாய் நான் உன்னை
உதறித் தள்ளிடினும்...
என்னை விட்டுச் செல்லாதே
என்ற என் குரல்
உன் செவிகளில் படும்
என்ற நம்பிக்கையுடன்....
இன்றும்!!!!
இனியபாரதி.
என் பாரதியின் அழகான வரி...
இன்று என் தலைப்பு....
நானும் அவனைப் போல்
எந்தத் துயர் வந்தாலும்
எதிர்த்துப் போராடி
என் வாழ்வை வெற்றி கொள்ள
விழைகிறேன்....
இனியபாரதி.
காற்றின் ஸ்பரிசம் கூட
அவளைத் தீண்டக் கூடாதென்று
உன் முந்தாணைக்குள்
அணைத்து வைக்கும் அன்பு
என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா....
இனியபாரதி.
இனிமை மிகு பாடல்....
அன்பு சாவைப்போல் வலிமைமிக்கது; அன்பு வெறி பாதாளம்போல் பொறாதது; அதன் பொறி, எரிக்கும் நெருப்புப் பொறி; அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து.
பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது; வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது;
நான் அணுவணுவாய் இரசித்த அழகான வரிகள்... பைபிளில் இருந்து....
அதிக பிரிவை உணரும் போது
உன் தனிமை மட்டுமே உனக்கு ஆறுதல் தரும்!!!
யாரிடம் சென்று ஓலமிட்டாலும்
காயம் ஆறுவது கடினம் தான்!!!
உன் தனிமையை ' மருந்தாக எடுத்துக் கொள் '
இனியபாரதி.