குணத்தின் மகிமை
பணம் இருந்தால் உன் பிணம் வரை ஆள் இருக்கும்.
நல்ல குணம் இருந்தால் பிணமாகிய பின்பும் மனதில் இருக்கும்.
இதுபோல் ஒரு காதலி...
வண்ணத்துப்பூச்சி போல் அழகாகவும்...
பூ பூக்கும் புன்னகை போலவும்...
மீனின் கண்ணைப் போலவும்...
தேனின் கூட்டைப் போல் ஒற்றுமையாகவும்...
சிட்டுக் குருவி போல் சிரித்துக் கொண்டும்...
குயில் போல் பாடிக் கொண்டும்...
பாம்பு, கீரியைப் போல் சண்டையிட்டுக் கொண்டும்...
எறும்பைப் போல் உழைத்துக் கொண்டும்...
முதலையைப் போல் அமைதியாகவும்...
குரங்கைப் போல் துருதுருவென்றும்...
சாரைப்பாம்பு, நல்லபாம்பைப் போல் என்றும் இணைந்தும்....
இது போன்ற ஒரு காதலியைத் தேடிக் கொண்டு இருக்கிறேன்...
பிறப்பு இறப்பு
இறக்கப் போகின்ற அந்த ஒரு நொடிக்காக
வாழ்கின்ற பல மணி நேரத்தை வீணாக்கி விடாதீர்.
வாழும் வாழ்க்கையை நம் ஆசைக்காக வாழாமல்...
நம் வாழ்க்கையை வாழ பிறர் ஆசைப்படும் படி வாழ்ந்து விட்டு செல்வோம்.
திரு...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக