செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

சிந்திக்க முடியா சில நிமிடங்கள்..

உரையாடிவிட்டு உறங்கச் செல்லும்
கணவன் மனைவி இருவரில்
அடுத்த நாள் உரையாடலுக்கு
இல்லாமல் போகும் மனைவியைப் பற்றி
எண்ணும் அந்த நிமிடங்கள்!!!
மாலை சேர்ந்து உணவருந்திய நண்பன்
அடுத்த நாள் காலையில் இல்லை என்று
உணரும் அந்த நிமிடங்கள்!
நம்முடன் நெருங்கிப் பழகும் நண்பனின்
தாய் அல்லது தந்தை இறக்கும் துக்க செய்தி
கேட்கும் நிமிடங்கள்!
நம் வீட்டின் அருகில் இருந்த
அழகான குட்டிக் குழந்தை
கிணற்றில் தவறி விழுந்து உயிர்துறந்த
அந்தக் கொடூர நிமிடங்கள்!
நம் அன்புக் காதலி
நமக்காக தன் உயிரைக் கொடுத்ததை
உணரும் அந்த நிமிடங்கள்!
இதுபோன்ற நிகழ்வுகள்
வாழ்வில் ஒருமுறை தான் வந்தாலும்
பலத்த சேதத்தை உருவாக்கிவிடுகின்றன...
மனதில்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: