திங்கள், 7 ஆகஸ்ட், 2017

உன் கிறுக்கல்கள் கூட...

அறியாத உன் சிறுவயதில்
நீ வரைந்த வண்ணக் கிறுக்கல்கள்
இன்றும் என் மனதில் பசுமையாய்
உன் அழகு முகத்தை நினைவுபடுத்துகிறது...

பொறுமையாய் எனக்குப் பொறுமையைக்
கற்றுக் கொடுத்தவள் நீ!

உன் அன்பை உணர ஒரு யுகம் தேவையில்லை...
உன்னுடனான ஒரு கணமே போதும்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: