கருவறையில் காவல் கூட எனக்குப் பெரிதாய் படவில்லை...
நான் பிறந்த உடன் கிடைத்த அமிர்தம் கூட எனக்கு இனிக்கவில்லை...
என்னை வளர்க்கும் போது கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்த
உங்கள் பெருந்தன்மை கூட பெரிதாய் படவில்லை...
படிக்கும்போது எனக்கு உதவி செய்தது கூட அவ்வளவாய் ஞாபகமில்லை...
இளம்பருவத்தில் அறிவுரை கூறியது கூட ஏறவில்லை...
முதுமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்..
இன்று உணர்கிறேன்..
உன் அறைக் காவலை...
உன் அன்புப்பாலை...
உன் பெருந்தன்மையை...
உன் வழிநடத்துதலை...
உன் அறிவுரைகளை...
'அம்மா' – நீ என்றுமே அழகானவள்.. அமிர்தமானவள்..
என்றும் உன் பிள்ளையாக உன்னுடனே...
உன் அன்பு...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக