வழியில் பார்க்கும் போது தோன்றுவதா!
அழகான பெண்ணைக் காணும் போது தோன்றுவதா!
உடன் பழகிய தோழியின் மேல் தோன்றுவதா!
பக்கத்து வீட்டுப் பெண்ணின் மீது தோன்றுவதா!
திருமண வீட்டில் பார்க்கும் பெண்ணின் மீது தோன்றுவதா!
பேருந்தில் பார்க்கும் பெண்ணின் மீது தோன்றுவதா!
பள்ளியில் உடன் பயிலும் பெண் மீது தோன்றுவதா!
அத்தை மகளின் மீது தோன்றுவதா!
தோழியின் தோழி மீது தோன்றுவதா!
கல்லூரித் தோழியின் மேல் தோன்றுவதா!
அழகாய் பேசும் பெண்ணின் மீது தோன்றுவதா!
அன்பாய் பழகும் பெண்ணின் மீது தோன்றுவதா!
அறிவாய் இருக்கும் பெண்ணின் மீது தோன்றுவதா!
ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்...
காதல் எப்படி பிறக்கிறதென்று!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக