பெற்றோர்களின் கனவு, ஆசைகளை உணர்ந்து கொண்டு
அவர்களைத் திருப்திப்படுத்தவும் முடியவில்லை..
அவர்களின் தொந்தரவால் நம்மால் திருப்திப்படவும் முடியவில்லை...
ஆசிரியர்களின் வார்த்தைகளைக் கேட்டு
அவர்களைத் திருப்திப்படுத்தவும் முடியவில்லை...
அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு
நம்மால் திருப்திப்படவும் முடியவில்லை...
நட்பு வட்டத்தில் அனைவரையும் திருப்திப்படுத்த முடியவில்லை...
சில நேரங்களில் அவர்களால் திருப்திப்படவும் முடியவில்லை...
வேலை பார்க்கும் இடத்தில் முதலாளிகளைத் திருப்திப்படுத்தவும் முடியவில்லை...
அவர்கள் கொடுக்கும் ஊதியத்தால் திருப்திப்படவும் முடியவில்லை...
கணவனுக்கும் பணிவிடை செய்து திருப்திப்படுத்தவும் முடியவில்லை...
அவரின் அன்பை நினைத்துத் திருப்திப்படவும் முடியவில்லை...
இப்படியே....
திருப்திப்படுத்தவும்... திருப்திப்படவும் முடியாமல்...
தவிக்கும் நிலை தான் இன்று அநேகரின் வாழ்வில்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக