என்னைத் தொடும் உரிமையை
யாருக்கும் நான் இன்னும் கொடுக்கவில்லை....
என்னைக் கேட்காமலே தொட்டுச் செல்கிறாய்...
அதுவும் கர்வத்துடன்... 'மழை'
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
என்னைத் தொடும் உரிமையை
யாருக்கும் நான் இன்னும் கொடுக்கவில்லை....
என்னைக் கேட்காமலே தொட்டுச் செல்கிறாய்...
அதுவும் கர்வத்துடன்... 'மழை'
இனியபாரதி.
அவளுக்காய் நான் செய்த ஒவ்வொன்றையும்
அவள் அறிந்து கொண்டாலோ இல்லையோ
அவள் தோழிகள் அறிந்து கொண்டனர்....
இப்படியும் ஆண்கள் இருக்கிறார்களோ
என்று
வியந்து பார்க்கின்றனர்...
அது அவளுக்கும் தெரியும்...
இருந்தும் என்னை ஏற்றுக் கொள்ள மறுக்கும்
அவளது பிடிவாதம்
எங்களைச் சேர விடாமல்
நிரந்தரமாகப் பிரித்து விடுமோ
என்ற பயம் தான் எனக்கு!!!
இனியபாரதி.
அவளைப் பற்றி எண்ணாத நேரங்களே இல்லை...
அவளில்லாமல் என்னில் ஒன்றும் நிகழ்வதில்லை...
அவளின்றி ஒரு அணு கூட அசையாது...
அவள் நினைவின்றி என் நாட்கள் செல்லாது...
அவள் மீதுள்ள என் அன்பு உண்மை என்பது தெரிந்தும்...
என் அன்பை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அவள் மனம் தான் இன்னும் எனக்குப் புரியவில்லை!!!
இனியபாரதி.
அவளை எனக்குப் பிடிக்கும் என்பதால்
அவள் கூறுவது அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன?
இருந்தும் அவள் சொல்வதை
ஏற்றுக்கொள்ளத் தான் செய்கிறேன்....
காரணம்....
நான் அவள் மீது கொண்டுள்ள அன்பு.
அவள்
நில் என்றால் நிற்கிறேன்...
நட என்றால் நடக்கிறேன்....
உண் என்றால் உண்கிறேன்...
இதற்கு மேல்
அவள் என் மீது
குறை கூற வாய்ப்பில்லை....
இனியபாரதி.
அவளுடன் பேசிய பொழுதுகள் எல்லாம்
அவள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்டதில்லை....
அவளுடன் பேசாத இந்த நாட்கள்
அவளின் குரலையாவது கேட்டு விட வேண்டுமென்று
மனம் துடிக்கிறது....
இந்த மெளனம் நீடித்தால்
என் மனவலி இன்னும் அதிகமாகும் என்பது
அவளுக்குப் புரியுமா? புரியாதா?
அதை எடுத்துச் சொல்லவும்
என் கௌரவம் இடம் கொடுக்கவில்லை....
இனியபாரதி.
நான் கவலை உற்று இருந்தாலும்
மகிழ்ச்சியுடன் இருந்தாலும்
ரசிக்கும் ஒரு விசயம்.... மழை
இனியபாரதி.
அழகுப் பதுமை
ஜன்னல் அருகில்...
கருங்கூந்தல் காற்றில் ஆட
அதனுடன் சேர்ந்து
அருகிருந்த மரத்தின்
இலைகளும் ஆட...
இலைகள் ஒன்றோடொன்று
உரையாடிக் கொண்டன....
"அவள் கருங்கூந்தல் அசைவின் காற்று
இளந்தென்றலாய் நம் மனதை வருடுகிறது..." என்று!
இனியபாரதி.
அழகிய கவிதைகள்...
மெச்சும் வருணனைகள்....
கற்பனைக்கெட்டா கதைகள்...
சொக்க வைக்கும் படங்கள்...
இவை அனைத்தும்
"உனக்காகத் தானே!"...
இனியபாரதி.
துக்கம் தொண்டையை அடைக்கிறது என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம்....
அது வேறு ஒன்றும் இல்லை....
கணவரிடம் சண்டை போட்டுக்
கொண்டிருக்கும் போதே...
அவர் எதுவும் நடக்காதது போல்
இரவு உணவைச் சாப்பிட்டு விட்டு
தூங்கச் செல்லும் போது
மனைவியின் நிலை தான்....
"அந்தத் துக்கம்"
இனியபாரதி.
இனிமையாய்
நீ அழைக்கும் அந்த அழகிய கொஞ்சலுக்காய்
என் அன்புப் பரிசாக
உனக்கு நான் எதைத் தருவது?
"என் இனிய நேரங்களைத் தவிர!!!"
இனியபாரதி.
நான் யோசித்து எழுதும்
எல்லாம் அழகு என்று தான்
நினைத்துக் கொண்டு
மானே...
தேனே....
என்று எழுதிக் கொண்டிருந்தேன்....
மற்றவரின் கற்பனை வளத்தைப்
பார்க்கும் போது தான்
நான் என்ன எழுதுகிறேன் என்றே
யோசிக்கத் தோன்றுகிறது....
இனியபாரதி.
உன்னைப் போல் நானும்
அழகாய் சிரித்துக் கொண்டு
என் நாட்களைக் கடக்க
ஆசைப்படுகிறேன்....
இனியபாரதி.
உன்னில் இல்லாத் திறமைகளா என்ன?
அள்ள அள்ளக் குறையாத அறிவுச் செல்வத்தை
இறைவன் உனக்கு வாரி வழங்கி உள்ளான்....
கருவறையில் ஆரம்பித்த உன் கலைத் தாகம்
யாரோ ஒருவருக்காய் அடங்கிடுமா என்ன?
இல்லை.....
உன் வீரத்தை அடக்க முடியுமா என்ன???
வெகுண்டெழு....
உன் வீரத்தைப் பெண்களின் மீது காட்டாமல்
உலகறியச் செய்யும் கலையாய் மாற்று!!!
வெற்றி உன் வசப்படட்டும்....
இனியபாரதி.
உனக்காய் ஓடி ஓடி உழைக்கும்
ஒவ்வொரு நொடியும்
என் வாழ்வில் ஏதோ சாதிக்கப் போவதாய்
அயராது ஓடுகிறேன்....
"அப்பா" - இனியபாரதி.
என்னிடம் எல்லாம் இருந்தும்
அதை உபயோகப்படுத்த
முடியாமல் தவிக்கும் நிலை
கொடுமையிலும் கொடுமை...
உன் வரவை நீ செலவு செய்ய
யார் அனுமதி வேண்டும் உனக்கு?
இனியபாரதி.
உறவுகள் நம் உணர்வுகளை மட்டும் அல்ல
நம் நினைவுகளையும் சுமக்கும்
கருவறைகள்...
உறவுகள் இல்லை என்றால்
உயிர்கள் உலகில் வாழ்ந்தும் மதிப்பில்லை....
உறவு இல்லா உள்ளம்
காற்றில்லா வெற்றிடம் போன்றது...
இனியபாரதி.
கோபப்பட்டு பேசாமல் இருக்கும்
பொழுதுகள் கூட
உன்னை மட்டுமே நினைக்கிறான்
உன் இனியவன்.....
இனியபாரதி.
காலங்களின் அருகில் நாம்
என்றும் ஒரு அடிமை போல்
அமர்ந்து கொண்டு
கணக்கிட்டுக் கொண்டு இருக்கிறோம்...
நம்மையும் நம் உழைப்பையும்
எடுத்து விழுங்களாம் என்று தான்
சதி செய்கிறதே தவிர
நமக்கு ஒரு ஆறுதலாய் இருக்க மறுக்கிறது....
இப்படியே ஓடிக் கொண்டிருக்கும்
இந்த வாழ்க்கையின் இறுதி நிலை தான்
என்ன என்பதை என் மனம் சிந்திக்க மறுக்கிறது!!!!
இனியபாரதி.
உன் மீதுள்ள அக்கறையில்
எல்லாவற்றையும் பார்த்து பார்த்து
செய்கிறேன் என்ற பெயரில்
உன்னை வாட்டி வதைக்கும்
ஒரு உயிர் உலகில் இருக்கிறது என்றால்
அது உன் துணை மட்டும் தான்....
அவள் இல்லாமல் நீயும் இல்லை...
நீ இல்லாமல் அவளும் இல்லை...
அவளைச் சரணடைந்த பின்
வேறு கவலை என்ன அவனுக்கு???
இனியபாரதி.
என் இனியவளின் அருகில் இருக்க
என் மனம் விரும்பிய நேரம்...
அவளின் வார்த்தைகள் மட்டுமே
என் வசந்தமாய் மாற...
என் இனிய பொழுதுகள் எல்லாம்
இருண்டு விட்டதாய் ஒரு பயம்!!!
இனியபாரதி.
உன்னுடன் செலவிடும்
இந்த நிமிடங்கள்
கொடுமையாக இருந்தாலும்
நீ கொடுக்கும் சில மருந்துகள்
என் வேதனையை மறக்கச்
செய்கின்றன....
இனியபாரதி.
நான் எவ்வளவு தான்
பொறுமையாக இருந்தாலும்
என் பொறுமையை
சோதிக்க வந்த
இம்சை என்றே
நினைக்கிறேன் உன்னை....
இனியபாரதி.
அவளைத் தேடி வந்து
கண்ட பிறகும்
அவளுடன் உறவாட
முடியவில்லையே என்ற ஏக்கம்
அவனின் நெஞ்சத்தைக்
கிழித்துச் செல்கிறது....
இனியபாரதி.
அவளுக்கு அது ஒன்றும் புதிதல்ல
ஆனாலும் அவன் அவளை
எந்நேரமும் காத்திருக்கத் தான்
வைப்பான்...
அதை எல்லாம் தாண்டி
அவனுடன் செலவிடும்
அந்த இரண்டொரு
நிமிடங்களுக்கு ஆசைப் பட்டுத் தான்
அவளும் பொறுத்துக் கொள்கிறாள்
அவன் செய்யும் செயல்களை!!!
இனியபாரதி.
ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு நேர் இவரோ...
தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ...
மூச்சிப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுப்பட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்
தூங்காம நீ விளக்கி தூங்காமத் தூங்கு கண்ணே
ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே
ஆராரோ ஆரிராரோ... ஆரிரோ ஆரிரரோ... ஆராரோ ஆரிராரோ... ஆரிரோ ஆரிரரோ...
நீ சொல்லும் ஒவ்வொன்றுக்கும்
நான் ஏதாவது மறுப்பு
சொல்கிறேன் என்று
நீ நினைப்பது தவறு!!!!
உன் அன்பில் இன்னும்
சற்று நிமிடங்கள்
திளைத்திருக்க ஆசைப்படுகிறேன்
என்பதே உண்மை....
இனியபாரதி.
இயற்கையில் இது கிடைத்தாலும்
என்னை அழகு செய்ய
செயற்கையாய் விற்கப்படும்
புன்னகையையே வாங்க
ஆசைப்படுகிறேன்....
இனியபாரதி.
என்ன தான்
அன்பு, பாசம் என்று பேசினாலும்
கணக்கற்ற முறையில்
அனாதை இல்லங்களும்
முதியோர் காப்பகங்களும்
உருவாகிக் கொண்டு தான்
இருக்கின்றன....
ஆனால்
உண்மையாக தான்
தாய் தந்தையை மதித்து
நடப்பவர்களும்
மதித்துக் கொண்டு தான்
இருக்கிறார்கள்....
இனியபாரதி.
உன் வாயில் இருந்து
இன்று வந்த
அந்த ஒரு வரிக்காக
எத்தனை நாட்கள்
தவம் இருந்திருப்பேன்....
பிறவிப் பயனை
அடைந்த திருப்தி எனக்கு!!!
இனியபாரதி.
உன் அளப்பரிய
அன்பிற்க்காய்
நன்றி சொல்ல
எனக்குத் தகுதி
இல்லை என்றாலும்
என் நல்ல செயல்களால்
உம்மை என்றும்
மேன்மைப் படுத்துவேன்....
இனியபாரதி.
உன்னைக் கண்டதும்
செல்வச் செழிப்பில்
திளைத்தவள் என்றே
நினைத்தேன்....
ஆனால் அவளிடம்
இருந்தது என்னவோ
அன்புச் செல்வம்
மட்டும் தான்...
கண்டான்...
கண் நோக்கினான்...
உணர்ந்தான்....
அவள் மட்டுமே எல்லாம்
என்றானான்...
யாருக்கும் அவளை
விட்டுக் கொடுக்கும்
மனமும் இல்லை...
சூழலும் அப்படி
அமையக் கூடாதென்று
எண்ணிக் கொண்டு இருக்கிறான்....
அவனது நேரமும் வரவில்லை...
அவளுக்கும் அதே நிலை தான்...
என்று தான் மாறும்
நம் வாழ்க்கை நிலை
என்று நொந்து கொண்டு
இருக்கிறார்கள்!!!!
இனியபாரதி.