சனி, 6 மே, 2017

I am not fit for this!!!

என் உற்ற தோழியிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அருகில் இல்லை என்றால் நட்பு கூட, நண்பர்கள் கூட காதலன் போலத் தான் தெரிகிறார்கள். அதனால் அடிக்கடி, என் தோழியிடம் பேசிக் கொள்வேன். இன்று இருவரும் உரையாடிக் கொண்டிருந்த போது, அவள் கூறிய ஒரு சொற்றொடர் தான் இது "I am fit for this". இதைச் சொன்னவுடன் அவளுக்கு அறிவுரை கூற ஆரம்பித்துவிட்டேன்.

அவள் சொன்னவுடன், என் மனதில் முதலில் தோன்றியது இந்த வடிவேலு காமெடி தான்.... 'இதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட!!!'.

அந்தக் காமெடிக்கு சரியான அர்த்தம் கொடுக்கப்படவில்லை என்றாலும், பல இடங்களில் இது உபயோகப்படுத்தப்படுகிறது.

என் தோழி பணிபுரியும் பள்ளிக் கூடத்தில், அவளுக்கு உயர்பதவி கொடுத்து கௌரவித்திருக்கிறார்கள். ஆனால், அவளுக்குப் பயமாகவும், கவலையாகவும் இருக்கிறதென்று கூறினாள். எப்படி என் வேலைகளை எல்லாம் சரியாகச் செய்யப்போகிறேன் தெரியவில்லை என்று கூறிக் கொண்டிந்தபோது, அவள் வாயிலிருந்து வந்த வார்த்தை தான் இது.....'I am not fit for this'.

அதற்கு நான் கூறிய உதாரணம்.
ஒரு அழகான அறை. அந்த அறையில் எங்குமே ஆணிகள் அடிக்கப்படவில்லை. ஆனால், நீ, உன் அழகான படத்தை அந்த அறையில் மாட்ட வேண்டுமென்று நினைக்கிறாய்! அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? அந்த அறையில், ஒரு ஆணி அடித்து, அதை மாட்டி வைக்க வேண்டும்.

அதாவது அழகான அறை என்பது உனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு. அந்த வாய்ப்பை நழுவ விடாமல், உன் கஷ்ட, நஷ்டங்களைப் பார்க்காமல், சரியான இடத்தில், சரியான சமயத்தில், உன்னை நிரூபிப்பாயானால், உன் அழகான செயல்கள், உன் திறமைகள் அந்த இடத்தில் பேசப்படும்.

நான் இதற்குத் தகுதியானவன் இல்லை என்று ஒருபோதும் எண்ணாதே... நீ, இந்த இடத்திற்குத் தகுதியானவள் என்பதனால் தான், இறைவன் உனக்கு இந்தத் தகுதியைக் கொடுத்திருக்கிறார். இதற்குள் நீ, உன்னைத் திணித்துக் கொண்டு, அதற்கேற்றாற் போல், உன்னை ஆக்கிக் கொண்டால், கண்டிப்பாக எல்லாம் கூடும்.

எல்லாம் சாத்தியமே!

நீ எல்லாவற்றிற்கும் ஏற்றவளே!

இறைவன் மீது உண்மையான பக்தியை வை!

உன்மீது சிறிதளவு நம்பிக்கை வை!

அன்புடன்,
இனியபாரதி.

கருத்துகள் இல்லை: