புதன், 3 மே, 2017

கசக்கும் பொழுதுகள்...

சாதாரண நாட்களில்
அசாராணமாகத் தூங்கத் தெரிந்த உனக்கு
இன்று மட்டும் ஏன் இப்போதே விழிப்பு?
உன் மனம் அலைபாய்வதென்னவோ
ஒன்றை நோக்கியே!
அதற்கு நீ தயாராகத் தான் வேண்டும்!
இன்பம் மட்டுமே வாழ்வில் இருந்தால்
துன்பத்திற்கு வேலை இல்லாமல் போய் விடுமே!
காலை உணவு தொண்டைக்குழிக்குள்
இறங்க முடியாமல் தத்தளிக்கின்றது!
மதிய உணவுப்பொட்டலம் தயாராகி விட்டது!
காத்திருந்து ஏறிய சிற்றுந்து
ஆடிஅசைந்து சென்று இறக்கி விட்டது!
பத்துமணிக்கெல்லாம் பத்துபலகாரம்
சாப்பிட்டு முடித்திருப்பேன்!
பதினொரு மணியாகியும் பச்சைத்தண்ணீர்
இறங்கவில்லை தொண்டைக்குள்!
இயந்திரத்திலிருந்து இறக்கிய வெந்நீர்
இறங்கியது ஒன்றரை மணிக்கு!
இதன்பின் மதிய உணவா?
ஆசையாய் திறந்த மதிய உணவுப் பெட்டி
வழக்கம் போல் ஏமாற்றியது!
மிஞ்சியது கருவேப்பிலை மட்டுமல்ல!
பாசமாய் என் அம்மா பேக் செய்த
சாதமும் தான்!
மாலை வீடு செல்லலாம் என்று நினைத்து
ஆசையில் வேலைகளை முடிக்கும் கடைசி நேரத்தில்....
இன்று உனக்கு 'ஆறு மணி வரை பள்ளிக்கூடம்'

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: