வியாழன், 4 மே, 2017

அம்மாவும் அன்பும்!!!

அம்மா என்ற மூன்றெழுத்திலிருந்து தான்
அன்பு என்ற மூன்றெழுத்து திரிந்திருக்க முடியும்
நம் தமிழ் மொழியில்!
அம்மா....
உன் அன்பைப் பற்றிப் பேச ஆயிரம் விசயங்கள் இருக்கலாம்...
உன் அன்பைப் பற்றி எழுத ஆயிரம் நபர்கள் இருக்கலாம்...
உன் அன்பைப் பற்றி பேச ஆயிரம் பட்டிமன்றங்கள் நடத்தலாம்...
உன் அன்பை உணர நான் மட்டுமே!
உணர்ந்த உன் அன்பை
என் பிள்ளைக்கு எடுத்துச்  செல்ல
நான் மட்டுமே!
அம்மா!!!
பாலூட்டி வளர்த்த போது தெரியவில்லை
அது தான் என் உடலின் குருதியென்று!
சோறூட்டி வளர்த்த போது தெரியவில்லை
அது தான் நான் வளரக் காரணமென்று!
தாலாட்டி வளர்த்த போது தெரியவில்லை
அது தான் என் மன அமைதியென்று!
சீராட்டி வளர்த்த போது தெரியவில்லை
அது தான் என் பெருமையென்று!
அடித்து வளர்த்த போது தெரியவில்லை
அது தான் என் வீரமென்று!
கண்டித்து வளர்த்த போது தெரியவில்லை
அது தான் என் எல்லையென்று!
இன்று தான் உணர்கிறேன்...
நீ தான் 'என் எல்லாமுமென்று'

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: