பார்க்கத்தவித்தேன் அவளுடன் சேர்ந்து உன்னையும்...
தேடித் திரிந்தேன் அறை அறையாய்
கண்டேன் என் கனவுச் சித்திரத்தை...
அள்ளி அணைக்கப் பரவசப்படுகிறேன்...
வாரி முத்தமிட முகம் குனிகிறேன்...
அந்தப் பிஞ்சின் ஸ்பரிசம்
என் கன்னங்களுக்கு அருகில்...
அதன் மூச்சுக் காற்றின் மென்மையில் மெய்மறந்தேன்.
இமையசையாமல் என் இனிமையை
என் கரங்களில் ஏந்திப் பார்க்கிறேன்...
கண்ணோரம் தவழும் என் கண்ணீருக்குக் கூட
மதிப்பிருப்பதை உணர்கிறேன்!
என் இரத்தத்தின் இரத்தமாய்!
என் உடலின் உடலாய்!
என் உயிரின் உயிராய்!
இந்த இன்பத்தை, என்னைப் போல நீயும்
அனுபவிக்கும் நாளை எண்ணி வியக்கிறேன்!
குட்டி மழலையின் அப்பா.
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக