ஈரக்காற்றின் மெல்லிய இசை
என்னை அதன் திசைப்பக்கம்
இழுத்துச் சென்றது!
செல்லும் வழியெங்கும்
தொட்டாற்சுருங்கி செடிகள்!
அவற்றைத் தொட்டுத் தொட்டுத்
சுருங்கிய அதன் இலைகள்
உணர்த்தியது என்னவோ
'உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?'
அவற்றிடம் விடைபெற்றுத்
திரும்பிய தருணம்
அழகானதொரு நீரோடை
வாய்க்காலில் பாய்ந்தோட...
அதில் என் கால்களை நனைக்க...
சற்று தொலையிலே
அந்தருவி தென்பட்டது...
சர சர சாரைகளை விலக்கிக் கொண்டு
சட்டென்று அருவி நோக்கிப் பாய்ந்தேன்!
பாய்ந்த அடுத்த நொடி
'அழகிய கடற்கன்னியாய்!'
ஐய்யோ... எல்லாம் கனவா?
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக