திங்கள், 1 மே, 2017

உனக்காக....

உன் கண்ணீருக்குப் பதில் சொல்லத் தெரியாத
அவளை எண்ணி ஏன் வருந்துகிறாய்?
உன் கண்ணீருக்குக் காரணமாய் இருக்கும்
அவளை நினைத்து ஏன் கலங்குகிறாய்?
சற்று வெளியே வா!
சுற்றிலும் பார்!
உனக்காகவே!
உனக்காக மட்டுமே!
உன் கண்ணீரைத் துடைக்க
கரங்கள் காத்திருக்கின்றன!

அவை
உன் நண்பர்களின் கரங்கள்.

அன்புடன்
இனியபாரதி.

கருத்துகள் இல்லை: