செவ்வாய், 9 மே, 2017

மெழுகின் ஒளி...

உனக்குப் பிடிக்குமே என்று
எனக்குப் பிடித்ததைக் கூட மறந்து
உனக்குப் பிடித்தாற்போல
மாற்றிக் கொண்டு
அது உனக்கேத் தெரியாததுபோல
ஏதோ எனக்கும் அதுவே பிடிக்கும் என்று
நீ நினைக்கும் அளவிற்கு
என்னை நானே மாற்றிக் கொள்கிறேன்!

இது எப்போதும் பெண்ணால் மட்டுமே சாத்தியம்!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: