செவ்வாய், 2 மே, 2017

வலிப்பது உன் இதயம் மட்டுமல்ல!

மதிற்சுவற்றின் கிறுக்கல்களை வாசிப்பது
உன்னவள் மட்டுமல்ல!
அவற்றில் சாய்ந்திருந்த கொடிகளும் தான்!
அவைகளின் இதயங்களும் வலிக்கின்றன
உன் கிறுக்கல்களைக் காணாமல்!
வாடிக்கிடப்பது உன் வஞ்சிக்கொடியின்
முகம் மட்டுமல்ல!
நீங்கள் நடந்து சென்ற வழிகளில்
பூத்துக் குலுங்கிய ரோஜாச் செடிகளும் தான்!
மயில்தோகை கூட மரச்சருகாய் தெரிகிறது
உன் மயிலுக்கு!
தார்சாலையும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது
உன் வருகையை எதிர்பார்த்து!
வானிலையில் மாற்றமுண்டு!
அவள் வாழ்வில் தான் மாற்றமில்லை!
மாற்றம் வரும்போது எங்கள் வலிகளும் மறையும் என்ற நம்பிக்கையில்!
வாழ்கின்றோம்!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: