ஞாயிறு, 7 மே, 2017

சுலபம் தான்!

செல்லும் இடமெல்லாம்
மற்றவர் மனதில் இடம் பிடிப்பது என்னவோ
உனக்கு சுலபம் தான்!
அழகாக ஆடையணிந்து
மற்றவரைக் கவர்வது கூட
உனக்கு சுலபம் தான்!
உன் நடையால்...
உன் பாவனையால்...
உன் கண்களால்...
உன் பேச்சால்...
உன் பாட்டால்....
உன் நடனத்தால்...
இப்படி எல்லாவற்றையும் ஒருங்கே வைத்துக் கொண்டு
மற்றவரைத் திணர வைப்பது கூட
உனக்கு சுலபம் தான்!
உன் அழகான கவிதையால்
உன் உற்றவரைக் கைக்குள் வைப்பது கூட
உனக்கு சுலபம் தான்!

உன்னைப் பற்றி உனக்கு
உணர வைப்பது தான் கடினம்!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: