மூன்று நாட்களாக, வீட்டில் வேலை இருந்ததால் என்னால் எழுத முடியவில்லை. நேற்று இரவு தான் அனைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் நிறைவுற்று எழுத அமர்ந்தேன். கடந்த மூன்று நாட்களாக, அதிக வேலைப்பளு. இந்த மூன்று நாட்களில், நான் இரசித்தது, 24 ஆம் தேதி இரவைத் தான். இந்த இரவு என்னுள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியது. எங்கள் சர்ச்சின் பாடகர் குழுவில் நானும் இருக்கிறேன். கடந்த ஒரு வாரமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குப் பாடல் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர், என்னை உன் குரல் நன்றாய் இருக்கிறது. ஆனால், நீ உணர்ந்து பாடவில்லை என்று கூறினார். இரண்டு நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். 24 அன்று இரவு எப்படியாவது என் ஆசிரியரிடம் திட்டு வாங்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.
சினிமா பாடல்களை உணர்ச்சி பொங்க பாடத்தெரிந்த எனக்கு, ஏன் இயேசுவின் பாடல்களை உணர்ந்து பாட முடியவில்லை என்று யோசித்தேன். நாம் பாடும் ஒவ்வொரு பாடலும், யாராவது ஒருவரை மையப்படுத்தியதாக இருக்கும்.
உதாரணமாக....
சென்டிமென்ட் பாடல்கள் என்றால், உடனே நம் அம்மாவும் அப்பாவும் கண்முன்னே வந்து விடுவார்கள்.
காதல் சம்பந்தமான பாடல்கள் என்றால், காதலி அல்லது காதலன் நினைவிற்கு வருவார்கள்.
நண்பர்களைப் பற்றிய பாடல்கள் என்றால், அவர்கள் நினைவிற்கு வருவார்கள்.
இப்படி ஒவ்வொரு பாடலுக்கும், ஒவ்வொரு உருவம் வரைந்து கொள்கிறோம். அதைப் போல், ஆலயத்தில் பாடப்படும் பாடல்களுக்கும் 'இயேசுவை' உருவமாகப் பாவித்துப் பாடினால், அந்தப் பாடல் அர்த்தம் பெறும். நம் உணர்ச்சிகள் வெளிப்படும். இதை 24 இரவு அன்று உணர்ந்தேன்.
என் அம்மா, என்னை எப்போதும் ஆலயத்தினுள் பேசாதே, சிரிக்காதே என்று சொல்லுவார். அன்று நானாகவே அதைச் செய்தேன். யாரிடமும் அனாவசியமாகப் பேசவில்லை. பாடல் பாடுவதையும், ஆராதனையை மட்டுமே கருத்தில் கொண்டேன். அன்றைய நாள் ஏனோ தெரியவில்லை...என்னுள் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். என் திறமை முழுமையையும், இறைவனுக்காக உபயோகித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. என் ஆசிரியரிடமும் நான் திட்டு வாங்கவில்லை.
இந்த இரவில், என் மனம் ஏங்கிய ஒன்று, நடந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி.
எதையும் முழுமனதோடு செய்யும் போது, நம்முடன் சேர்ந்து, நம் உள்ளமும், ஆன்மாவும் மகிழ்வுறும்.
இனிய இரவை அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றி!!!
இனிய காலை வணக்கங்களுடன்...
இனியா.

1 கருத்து:
Happy x mas
கருத்துரையிடுக